termination
முடித்தல், முடிவுறச் செய்தல்
தமிழ் விளக்கம்
ஒரு சமூகப்பணியாளருக்கும் அவரின் வாடிக்கையாளருக்குமிடையே ஏற்பட்ட தொழில்ரீதியான உறவை முடித்துக்கொள்ளும் நிலை. இது அவர்களால் நிச்சயிக்கப்பட்ட நோக்கம் நிறைவேறியதாலோ, அதற்கான காலக்கெடு முடிந்ததாலோ அல்லது வாடிக்கையாளரின் ஆர்வம் குறைந்ததாலோ ஏற்படலாம். முடித்துக்கொள்ளுதல் என்பது நோக்கம் நிறைவேறியதைப் பற்றிய மதிப்பீட்டையும், வாடிக்கையாளர் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புதல், வாடிக்கையாளரின் இகழ்ச்சி, நிராகரிப்பு போன்றவற்றை உள்ளடக்கியதாகவும் இருக்கும். இந்த எதிர்மறைக் கூறுகள் மட்டுமல்ல, எதிர்காலத்தில் இதே மாதிரியான பிரச்சனைகள் உருவாகும் பொழுது அதை எப்படிக் கையாளவேண்டும், அதற்கான உதவிகளை எங்கிருந்து பெற்றுக்கொள்வது போன்ற ஆலோசனைகளை உள்ளடக்கியதாகவும் இருக்கும்.
பார்க்க: premature termination - வாடிக்கையாளரை நிர்க்கதியாய் விட்டுவிடுவது - தொடர்ந்து உதவியோ, வழிகாட்டலோ வாடிக்கையாளருக்குத் தேவைப்படுமென்று தெரிந்திருந்தும், வாடிக்கையாளரின் பிரச்சனைகள் முழுமையாகத் தீர்க்கப்படவில்லையென்று தெரிந்திருந்தும், வாடிக்கையாளர்களின் பொருளாதார நிலையாலோ, குறிப்பிட்ட நிலைக்குமேல் காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்து தங்களுக்கான சேவைக் கட்டணத்தைப் பெறமுடியாதென்று தெரியவரும் நிலையில், தங்களுடைய சேவையை நிறுத்திக்கொள்ளும் சமூகப்பணியாளர் மற்றும் பிற திறத்தொழிலினரின் நெறியற்ற தொழில் அணுகுமுறையைக் குறிக்கும் சொல். இவர்கள் தங்களுடைய சேவையை நிறுத்திக்கொள்வதை மிக நாசூக்காக மூன்று வழிகளில் வெளிப்படுத்துவர். 1. வாடிக்கையாளர் எதற்காகத் தங்களிடம் வந்தார்களோ அந்த நோக்கம் நிறைவேறிவிட்டதென்று சொல்லி சேவையை நிறுத்திக்கொள்வது. 2. தன்னைவிட இன்னார் மிகச் சரியான சேவையை வழங்க முடியுமென்று கூறி, பிறரிடம் கைகாட்டிவிட்டு சேவையை நிறுத்திக்கொள்வது 3. நியாமற்ற பரிந்துரைகளை வழங்கி அதன்படி வாடிக்கையாளரால் நடக்கமுடியாத பட்சத்தில், தாங்கள் செய்த பரிந்துரைகளின்படி வாடிக்கையாளர் நடந்துகொள்ளவில்லை என்று சொல்லி சேவையை நிறுத்திக்கொள்வது.
client dumping - மேல குறிப்பிட்ட பொருளில் பயன்படும் மாற்றுச் சொல்லாடல்.

English
The conclusion of the social worker-client intervention process; a systematic procedure for disengaging the working relationship. It occurs when goals are reached, when the specified time for working has ended, or when the client is no longer interested in continuing. Termination often includes evaluating the progress toward goal achievement, working through, resistance, denial, and flight into illness. The termination phase also includes discussions about how to anticipate and resolve future problems and how to find additional resources to call on as future needs indicate. See also premature termination and "client dumping".