terrorism

அச்சுறுத்தும் போக்கு, தீவிரவாதம், வன்முறை, பயங்கரவாதம், வன்முறைச்செயல்

தமிழ் விளக்கம்

அரசியல் தூண்டுதலாலோ அல்லது குற்றக் குழுக்களின் தூண்டுதலாலோ, திட்டமிட்டு பிறரை பீதிக்குள்ளாக்கியோ, மிரட்டியோ அல்லது சமூக நடைமுறைகளைப் பாதித்தோ தங்களைப் பிரபலப்படுத்திக்கொள்ளவோ, விளம்பரம் தேடிக்கொள்ளவோ அல்லது சலுகைகள் பெறவோ செய்யப்படும் முயற்சி. இது வன்முறை கலந்த சமூகச் செயல்பாடு.
தீவிரவாதம், பயங்கரவாதம், அடிப்படைவாதம் போன்ற சொல்லாடல்கள் ஒன்றிற்கு பதிலியாக பயன்படுத்தப்பட்டாலும், அவைகள் ஒரே பொருளுடையவை அல்ல. பயங்கரவாதம் என்பது, பிறரை அச்சுறுத்தி, தன்னுடைய குறிக்கோள்களை அடைய முயல்வது. கொடுஞ்செயலில் அல்லது உடலுக்கு, உடமைக்கு தீங்கு விளைவிக்கும் தாக்குதலில் ஈடுபடுவது. தீவிரவாதம் என்பது பிரச்சனைகளைத் தீர்க்க சமரசமற்ற, தீவிர வழிமுறைகளைக் கடைப்பிடிக்கும் போக்கு அல்லது குறிப்பிட்ட அரசியல் கொள்கைகளில் தீவிர நிலைப்பாடு எடுத்தல். இந்தியாவின் விடுதலைக்குப் போராடிய காந்தியாரும், திலகரும் மிதவாதியாகவும், தீவிரவாதியாகவும் வரலாற்றில் வர்ணிக்கப்படுகின்றனர். தீவிரவாதம் வேறு. பயங்கரவாதம் வேறு. தீவிரவாதங்களுக்கு ஒரு கொள்கையுண்டு. பயங்கரவாதங்களுக்கு எவ்விதக் கொள்கையும் கிடையாது. அடிப்படைவாதம் என்பது, ஒரு நம்பிக்கை மீது ஆழமானதும், முழுமையானதுமான ஈடுபாடு கொண்டிருத்தல். சில அடிப்படைக் கொள்கைகளைக் கடுமையாகக் கடைப்பிடித்தல். தற்கால சமூக, அரசியல் வாழ்க்கை முறைகளுக்காக கொள்கைகளை விட்டுக்கொடுப்பதற்கு எதிரான எதிர்வினை போன்றவற்றைக் குறிக்கும். அடிப்படைவாதம் என்பதைப் பெரும்பாலும், எதிர்மறைக் குறிப்புத் தோன்றவே பயன்படுத்துகின்றனர். வலதுசாரி அடிப்படைவாதம், முஸ்லிம் அடிப்படைவாதம், இந்து அடிப்படைவாதம் போன்ற தொடர்கள் இதற்கு எடுத்துக்காட்டுகள் ஆகும்.

English

The systematic use of fear, intimidation, and disruption of social systems, usually by politically motivated or criminal groups, to gain publicity or concessions. This is a violent form of social activism. See also social activist.