tertiary gain

மூன்றாம் நிலை ஆதாயம்

தமிழ் விளக்கம்

நோய்வாய்ப்படுவதால் நோயாளிக்கும் அவர்களைக் கவனித்துக் கொள்பவர்களுக்கும் அசௌகரியங்களும், சில ஆதாயங்களும் உண்டாகின்றன. நோய்வாய்ப்படுவதால் நோயுற்றவர்களும், அவர்களைக் கவனித்துக் கொள்பவர்களும் பல்வேறு ஆதாயங்களை அனுபவிக்கின்றார்கள். நோயுற்றவர் உளப் பாதுகாப்பு முறைகளைப் (defense mechanisms) பயன்படுத்துவதன் மூலமும், உளவியல் கோளாறுகளை உடலுபாதைகளாக (conversion disorder) மாற்றிக்கொள்வதன் மூலமும், மன அழுத்தம், குற்ற உணர்வு மற்றும் விரும்பத்தகாத உணர்வுகளிலிருந்து விடுதலை பெறுவதால், ஒரு நோயாளி தனக்குள்ளே பெரும் சுகத்தை முதல் நிலை ஆதாயம் என்பர். இரண்டாம் நிலை ஆதாயம் என்பது நோய்வாய்ப்படுவதால் மற்றவர்களிடமிருந்து கிடைக்கும் பச்சாதாபம் கவனிப்பு, சலுகைகள், மற்றும் விரும்பத்தகாத பொறுப்புகளிலிருந்து விடுதலை பெறுவது போன்றவை. மூன்றாம் நிலை ஆதாயம் (tertiary gain) என்பது நோயுற்றவர்களைத் தவிர நோயாளிகளைக் கவனித்துக் கொள்பவர்களுக்கு கிடைக்கும் அங்கீகாரம், பாராட்டு போன்றவை. .
பார்க்க: malingering - செயற்கையாக நோய்க்குறிகள் வெளிப்படுத்தும் சீர்கேடு, போலி நோய்க்குறிகள், மனநோய் இருப்பது போல பாசாங்கு செய்தல்
factitious disorder - செய்ற்கையாக நோய்க்குறிகள் வெளிப்படுத்தும் சீர்கேடு, போலி நோய்க்குறிகள், மனநோய் இருப்பது போல பாசாங்கு செய்தல்.

English

The advantages and benefits a person with a physical or mental illness brings to others as a result of the illness. For example, a patient's sickness requires that the spouse remain home to provide care and avoid working at an unpleasant job.