tertiary prevention
மூன்றாம் நிலைத் தடுப்பு
தமிழ் விளக்கம்
பிரச்சனை / நோய்த் தடுப்பு முயற்சியில் முதல் நிலைத் தடுப்பு (primary prevention) என்பது தனிமனிதர் மற்றும் சமூக அளவில் நோய்களோ அல்லது காயங்களோ ஏற்படாமல் தடுப்பது. இரண்டாம் நிலைத் தடுப்பு (secondary prevention) என்பது, தடுப்பாற்றல் முயற்சியையும் கடந்து உருவாகும் நோய்களையும், காயங்களையும் உடனுக்குடன் கண்டறிந்து அதன் பாதிப்புகளைக் குறைக்கத் தேவையான முயற்சிகளை மேற்கொண்டு, இயல்பு நிலைக்குத் திரும்ப உதவுவது. மூன்றாம் நிலைத் தடுப்பு என்பது ஏற்பட்டுவிட்ட நோய்களுக்கும், காயங்களுக்கும் தொடர் சிகிச்சை / பராமரிப்பு அளிப்பதன் மூலம் அதன் பாதிப்புகளைக் குறைப்பது. அது பிற வியாதிகளை / பிரச்சனைகளை / பக்க விளைவுகளை ஏற்படுத்தாவண்ணம் கட்டுக்குள் வைத்திருப்பது. சமூகப்பணியில் மூன்றாம் நிலைத் தடுப்பு என்பது ஒரு பிரச்சனையினால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர் அப்பிரச்சனையிலிருந்து மீண்டெழுவதற்கும், அந்தப் பிரச்சனையில் மீண்டும் சிக்கிக்கொள்ளாதபடி போதுமான வலிமையைத் தருவதுமாகும்.
பார்க்க: primary prevention - முதனிலைத் தடுப்பு - நோய்களையோ அல்லது சமூகப் பிரச்சனைகளையோ உருவாக்குமென்று கருதப்படுகின்ற காரணிகளைக் கட்டுக்குள் வைத்திருக்கச் செய்யப்படும் செயல்பாடுகள். எடுத்துக்காட்டாக, ஒரு சமுதாயத்தில் செய்து தரப்படும் சுகாதார வசதிகள், பொழுதுபோக்கு மையங்கள் மற்றும் பூங்காக்கள் அங்கு நோய்கள் பரவவிடாமல் தடுக்கும், மன அழுத்தத்தால் உண்டாகும் சீர்கேடுகளைக் குறைக்கும். சமூக நலத்திட்டங்கள் மூலமாகச் செய்து தரப்படும் சமூகக் காப்புறுதி திட்டங்களும், சமுதாய ஊழியரகங்களும் பல பிரச்சனைகளைத் தடுப்பதுடன், மக்களை சமூக இணக்கமுள்ளவர்களாக்கி, பிரச்சைகளைத் தவிர்க்கவும், வாய்ப்புகளை விரிவாக்கவும் உதவுகின்றன.
Secondary prevention - இரண்டாம் நிலைத் தடுப்பு - இரண்டாம் நிலைத் தடுப்பு என்பது, தடுப்பாற்றல் முயற்சியையும் கடந்து உருவாகும் நோய்களையும், காயங்களையும் உடனுக்குடன் கண்டறிந்து அதன் பாதிப்புகளைக் குறைக்கத் தேவையான முயற்சிகளை மேற்கொண்டு, இயல்பு நிலைக்குத் திரும்ப உதவுவது.

English
Rehabilitative efforts by the social worker or other professional to assist a client who has already experienced a problem to recuperate from its effects and develop sufficient strengths to preclude its return. Most forms of clinical intervention can be considered forms of tertiary prevention. See also primary prevention and secondary prevention.