test case

சோதனை வழக்கு

தமிழ் விளக்கம்

ஒரு சட்டமோ அல்லது சட்ட நடைமுறையோ சரியானதுதான என்று தீர்மானிக்கத் தொடுக்கப்படும் வழக்கு. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட சட்டத்தைப் பற்றியோ அல்லது புதிய திருத்தங்களின் அடிப்படையில் பழைய சட்ட நடைமுறைகளின் செல்லுபடித்தன்மையை நீதிமன்றங்கள் மூலமாகச் சோதிக்க குறிப்பிட்ட வழக்கறிஞர்கள் தொடுக்கும் வழக்கு. எடுத்துக்காட்டாக உளச் சிகிச்சை, மனநல மருத்துவர்களால் மட்டுமே அளிக்கப்பட வேண்டுமென்றும், மற்றவர்கள் அச்சிகிச்சை அளிப்பது சட்டவிரோதம் என்று சட்டம் இயற்றப்பட்டபோது, அதை எதிர்த்து தேர்ந்தெடுக்கப்பட்ட சமூகப்பணியாளர்களில் ஒருவர் உளச் சிகிச்சை தர முயன்று, அதற்காக கைது செய்யப்பட்டு அவரின் மீது வழக்கு தொடரப்படும்போது, சமூகப்பணியாளர்கள் அந்த வழக்கை முன்னின்று நடத்தி, உளச் சிகிச்சை அளிப்பதில் தங்களின் பங்களிப்பை நிரூபித்து, அந்தச் சட்டத் தடையை எதிர்கொள்வது.

English

A lawsuit to determine whether a law or legal practice is valid. Often the case is brought intentionally by a causeoriented group to test the validity of a newly passed law. For example, a state enacts a law stating that psychotherapy may be provided only by psychiatrists. A social work group might designate one of its members to provide psychotherapy and therefore be arrested. The resulting court case could test whether the law could be upheld.