tetrogens

கரு வளர்ச்சிக் குறைப்பி, கருஊனமாக்கி, பூதச்செனி, கருவளர்ச்சிக் குறைபாட்டுக் காரணி

தமிழ் விளக்கம்

கர்ப்ப காலத்தில் கரு வளர்ச்சியைப் பாதித்து, பல்வேறு விதமான பிறவிக் குறைபாடுகளையும் (மன வளர்ச்சிக் குறைபாடு, கற்றல் குறைபாடு, வளர்ச்சிக்குறைபாடு. பிறவிக் குறைபாடு (உ.ம் பிளந்த மேலன்னம், இரத்த ஒழுக்கு), சிலநேரங்களில் கருச்சிதைவையும், சிசுமரணத்தையும் உண்டாக்கவல்ல பொருளையோ, மருந்தையோ அல்லது சூழ்நிலையையோ கருஊனமாக்கி என்று சொல்வதுண்டு. கரு ஊனமாக்கிகள் மருத்துவார்களால் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளாகவோ, இரசாயனங்களாகவோ (மது, புகையிலை, நுண்ணுயிர் எதிர்ப்பிகள்), கர்ப்ப காலத்தில் ஏற்படும் தொற்று நோய்களாகவோ, கதிரியக்கமாகவோ இருக்கலாம். பிறவிக் குறைபாடுகளில் 4-5 சதவீதம் வரை கருஊனமாக்கிகளாலே ஏற்படுவதாகச் சொல்லப்படுகிறது. கருவின் வளர்ச்சி, கருவைச் சுமந்திருக்கும் தாயின் சூழ்நிலை போன்றவற்றால் கருஊனமாக்கிகளின் பாதிப்புத் தன்மை வேறுபட்டாலும், சில ஊனமாக்கிகள் குறிப்பாக கர்ப்ப காலத்தின் போது மதுவருந்தும் பழக்கம் பரவலான பாதிப்புகளை ஏற்படுத்தும் ஆற்றல் கொண்டது என்று அறியப்பட்டுள்ளது.

English

Factors that are potentially harmful to a developing fetus or embryo, sometimes resulting in miscarriage, neonatal death, congenital deformities, mental retardation, learning disabilities, and growth retardation. Tetrogens include drugs and chemicals (alcohol, cocaine, tobacco, and some antibiotics), infections (rubella, some sexually transmitted diseases [STDs], and acquired immune deficiency syndrome [AIDS]), and radiation. Tetrogenic effects vary with type of agent, duration and frequency of exposure, and stage of fetal development; some fetuses are more vulnerable than others to the same tetrogens. Fetal exposure to alcohol is a major cause of mental retardation.