theory
கோட்பாடு
தமிழ் விளக்கம்
1. தகவல்களை ஒருங்கிணைத்து உருவாக்கப்படும் பொது ஊகம் அல்லது கருத்து.
2. கோல்பெர்க் கோட்பாடு - மனித வளர்ச்சியின் பல்வேறு பரிணாமங்களை - உடல் வளர்ச்சி, மன வளர்ச்சி, கற்றல் வளர்ச்சி, அறியும் திறன் வளர்ச்சி, அறநெறி வளர்ச்சி, நம்பிக்கை வளர்ச்சி போன்றவற்றை உளவியலாளர்கள் ஆராய்ந்தார்கள். இவர்களில் லாரன்ஸ் கோல்பெர்க் என்ற உளவியலாளர் தனிமனிதர்களிடம், எது 'சரி / தவறு' 'நன்மை / தீமை' என்று பகுத்தாயும் அறநெறித்திறன் எப்படிப் படிப்படியாக வளர்கிறது என்பதை ஆராய்ந்தார். ஒவ்வொரு மனிதனின் அறவுணர்ச்சி அல்லது நன்னெறி நடத்தைப் பாங்கு மூன்று தளங்களில், ஆறு படிநிலைகளில் வளர்வதாக கோல்பெர்க் கண்டறிந்தார். முதல் தளமான தற்பண்புக்கு முந்தைய நிலை (Pre-conventional) இரண்டு படிநிலைகளைக் கொண்டது. 1.முதல் நிலையில் தண்டனையிலிருந்து தப்பிப்பதற்காக நல்லொழுக்கம் பின்பற்றப்படுகிறது 2. இரண்டாம் நிலையில் பாராட்டப்படுவதற்காகவும், வெகுமதி பெரும் பொருட்டும் நல்லொழுக்கம் பின்பற்றப்படுகிறது. இரண்டாம் தளம் தற்பண்பு அல்லது மரபொழுக்க நிலை (Conventional Stage) இந்த தளமும் இரண்டு படிநிலைகளைக்கொண்டது 3. மூன்றாம் நிலையில் பிறரால் வெறுக்கப்படாமலிருக்கவும், நல்லவனென்று நினைக்கப்படவும் நல்லொழுக்கம் பின்பற்றப்படுகிறது. 4. நான்காம் நிலையில் ஒரு சமூகம் கட்டுக்கோப்பாக இயங்க அதற்கு விதிமுறைகள் தேவையாதலால், விதிமுறைகளைப் பின்பற்றவேண்டியது தன்னுடைய கடமை என்ற உணர்வில் நல்லொழுக்கம் பின்பற்றப்படுகிறது. மூன்றாம் தளம் தற்பண்பு, மரபொழுக்கம் கடந்த (post- conventional) பொதுமை நிலை. இதுவும் இரண்டு படிநிலைகளைக் கொண்டது 5. ஐந்தாம் நிலையில் போட்டியும் பொறாமையும் முரண்பாடுகள் இருந்தாலும், நியாயமாக நடந்து கொள்ளவேண்டும் என்று எண்ணும் நல்லொழுக்க நிலை 6. ஆறாம் நிலையில் உலகளாவிய பொதுநன்மை கருதிப் பின்பற்றப்படும் நல்லொழுக்கங்களை விருப்புடன் பின்பற்றும் உயர்நிலை ஒழுக்கம். பெரும்பாலான மனிதர்களின் நல்லொழுக்க வளர்ச்சி முதல் இரண்டு நிலைகளில் (தண்டனை பயம், வெகுமதி பெறும் ஆர்வம்) முடிந்துவிடுவதாக கோல்பெர்க் கணிக்கின்றார். அடுத்த இரண்டு நிலைகள் (வெறுப்பு தவிர்த்தல், விரும்பப்படல், நல்லொழுக்கக் கடமை) வளரிளம் பருவத்தில் ஏற்படுகிறது. மூன்றாம் தளத்தை பெரும்பாலான மனிதர்கள் இருபது வயதிற்கு மேல் உணர ஆரம்பித்தாலும் அவர்களால் அந்த நல்லொழுக்கக் கூறுகளை முழுமையாகப் பின்பற்ற முடிவதில்லை.

English
A set of related concepts proposed by Lawrence Kohlberg in the early 1970s to explain the way an individual's ethics and ideas about "right and wrong" change with age. Six stages or levels of development are delineated: (1) rules are obeyed to avoid punishment, (2) rules are obeyed to obtain rewards, (3) the individual obeys rules mostly to avoid being disliked and to be seen as being "good," (4) the individual develops an appreciation for society's need for rules and a conscience or sense of guilt at wrongdoing, (5) the individual understands that there are competing and contradictory values and that some impartial judgments are necessary, and (6) the individual appreciates the validity of universal moral principles and develops a commitment to them. Most individuals are believed to have completed the first two stages (preconventional level of moral development) by age nine. The next two stages (conventional level) are usually completed during early adolescence. Most people do not reach the last two (postconventional level) until after age 20, and many people never reach this level at all, according to Kohlberg.