theory

கொள்கை, கோட்பாடு, கருதுகோள், எண்ணக்கரு, கருத்தியல் திட்டம், ஊகக் கருத்து, தத்துவம், தற்காலிகமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கை

தமிழ் விளக்கம்

அன்றாட வாழ்வில், மக்கள் ஒரு தனிப்பட்டவரின் கருத்தைச் சொல்லவோ, ஒரு அவதானிப்பு / உண்மையை விளக்க முற்படும் அனுமானங்களையோ, ஊகத்தையோ குறிப்பிடவோதான் theory / கொள்கை என்ற சொல்லைப் பயன்படுத்துவர். ஆனால், நவீன அறிவியலில், அறிவியல் கோட்பாடு (scientific theory) என்பது அறிவியல் முறைகளால் தொடர்ச்சியான சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு, கவனிப்புக்களாலும், பரிசோதனைகளாலும் சரியெனக் காணப்பட்ட, இயற்கை உலகின் ஏதாவது ஒரு அம்சம் தொடர்பான உறுதிப்படுத்தப்பட்ட விளக்கம் ஆகும்.

English

A group of related hypotheses, concepts, and constructs, based on facts and observations, that attempts to explain a particular phenomenon.