therapeutic community

சிகிச்சைக்கான சமூகம், சிகிச்சைக்கான உளப்பினியர் சமூகம்

தமிழ் விளக்கம்

பார்க்க milieu therapy - சூழல் சிகிச்சை, பலவகை உளப்பிணியர்களடங்கிய சிகிச்சைக் குழு, உளப்பிணியர் குழு சிகிச்சை - மனநலம் பாதிக்கப்பட்டு மனநோய் மருத்துவமனைகளில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளுக்கு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு கொடுக்கக் கடைப்பிடிக்கப்படும் அணுகுமுறை. இந்த முறையில் நோயாளிகளின் உணர்வு மற்றும் தனிப்பட்ட தேவைகளை மனதில் கொண்டு, அதெற்கேற்ப சிகிச்சைக் குழுக்களையோ அல்லது சிகிச்சை சமுதாயத்தையோ உருவாக்கி அவர்களுக்குப் பொருத்தமான செயல்களைப் பரிந்துரைத்து, அந்தச் செயல்களின் மூலம் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளும்படியான சூழ்நிலையை உருவாக்கி, உருவாக்கப்பட்ட சூழ்நிலையையே நோய்தீர்க்கும் உபாயமாகக் கொள்வது.

English

A synonym for milieu therapy.