third party
மூன்றாம் தரப்பு
தமிழ் விளக்கம்
தன்னிடம் வந்த ஒருவரின் பிரச்சனையைத் தீர்க்க சேவையை வழங்கிய ஒருவருக்கு (முதல் தரப்பினர்), சேவையைப் பெற்றுக்கொண்டவரிடம் (இரண்டாம் tharappu) கருத்தோ அல்லது சேவையைப் பெற்றுக்கொண்டதற்கான அத்தாட்சியோ பெற்றுக்கொண்டு, முதல் தரப்பினருக்கு சேவைக்கட்டணம் வழங்கும் நிறுவனம் (மூன்றாம் தரப்பு).
நான்காம் தரப்பு - மருத்துவ சேவை வழங்குனர் அல்லது நலச் சேவை வழங்குனர் (1), சேவையை பெறும் வாடிக்கையாளர் அல்லது நுகர்வோர் (2), அந்த சேவைக்கான செலவினங்களை ஏற்றுக்கொள்பவர் (3) என்ற முத்தரப்பினருக்கும் இடைநின்று நிதியை நிர்வகிப்பவரை நான்காம் தரப்பு என்கின்றனர். இந்த நான்காம் தரப்பினர் வழங்கப்பட்ட சேவைக்கான கட்டணத்தைத் தானாகக் கொடுக்கமாட்டார். மாறாக மூன்றாம் தரப்பிலிருந்து (சேவைக்கான செலவினங்களை ஏற்றுக்கொள்பவர்) நிதியைப் பெற்று முதல் தரப்பினருக்கு (மருத்துவ சேவை அல்லது நலச் சேவை வழங்குனர்) வழங்குவார். இராணுவ சேவை புரிந்தவர்களுக்கு (சீருடைப் பணியாளர் Uniformed service) தனியார் மருத்துவ மனைகளில் சிகிச்சை அளிக்கப்படும்போது (CHAMPUS: Civilian Health and Medical Program of the Uniformed Services) அதற்கான செலவுகளை சம்மந்தப்பட்ட அரசுத் துறையிடமிருந்து பெற்றுத் தருவார்.

English
A government funding agency or private insurance company that reimburses a social worker or other service provider (first party) for helping a client (second party). See also fourth party and managed health care program.