third-sector organizations
மூன்றாம் தரப்பு நிறுவனங்கள்
தமிழ் விளக்கம்
அரசு (முதல் தரப்பு), இலாப வணிக நோக்கோடு செயல்படும் நிறுவனங்கள் (இரண்டாம் தரப்பு) அல்லாத பொதுநலனை முன்னிட்டு செயல்படும் தொண்டு நிறுவனங்களை / அமைப்புகளை மூன்றாம் தரப்பு நிறுவனங்கள் என்றழைப்பர்.
பார்க்க: nongovernment organizations - அரசு சார்பற்ற நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்கள் - பலபெயர்களில், பலநோக்கங்களுக்காக, பலவழிமுறைகளைக் கையாண்டு சமூக முன்னேற்றத்திற்காகப் பாடுபடும் நிறுவனங்கள், அந்தந்தக் காலகட்டத்திற்கு ஏற்ப வெவ்வேறு பெயர்களிடப்பட்டு அழைக்கப்படுகின்றன. ஆரம்பத்தில் அறநிறுவனங்கள் என்றும், பின்னர் தொண்டு நிறுவனங்கள், தன்னார்வ நிறுவனங்கள், அரசுசாரா நிறுவனங்கள், இலாபநோக்கற்ற நிறுவனங்கள், குடிமைச் சமுதாய அமைப்புகள் (civil society organizations), சமூக சேவை முனைவகம் (social enterprise) என்று பலபெயர்களில் அழைக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகளின் சபையும், அதைச் சார்ந்த நிறுவனங்களும் பெரும்பாலும் அரசுத்துறைகளுடனே இணைந்து செயல்படும். அரசுத்துறை சாராத நிறுவனங்களைத் தங்களின் ஆலோசனைகளில் பங்கெடுக்க அழைத்த போது, அதைக்குறிக்க அரசு சார நிறுவனங்கள் என்று அழைக்கத் தொடங்க, அதுவே இந் நிறுவனங்களின் தன்மையைப் பிரதிபலித்ததால், அந்தப் பெயரே நிலைபெற்று விட்டது. எப்படிப் பெயரிட்டு அழைக்கப்பட்டாலும், சிறிதும் பெரிதுமான இந்நிறுவனங்களின் நோக்கம் மானுட நலனே. கல்வி, சுகாதாரம், பொருளாதார மேம்பாடு, மனித உரிமைகள், பெண்கள், சிறுவர், முதியோர் நலன், சமூக மாற்றம், சமூக சமத்துவம், சுற்றுச் சூழல் பாதுகாப்பு, புலம்பெயர்ந்தோர் நலன் என்று பல தளங்களில் இந்நிறுவனங்கள் செயல்படுகிறது. சில நிறுவனங்கள் தேசிய அரசுகளின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக அரசு எதிர்ப்பு முயற்சிகளையும் செய்கிறது. பலநாடுகளிலும், ஐக்கிய நாட்டு அமைப்புகளிலும் இந்நிறுவனங்களுக்கு ஆலோசகர் அந்தஸ்து அளிகிக்கப்பட்டுள்ளன. இந்த நிறுவனங்கள், அரசுத் தலையீடின்றி, தங்கள் நோக்கங்களை வரையறை செய்துகொண்டு, அதற்கான ஆதாரங்களை தாங்களாகவே திரட்டிக்கொண்டு, செயல்படும் நிறுவனங்களாகும்.

English
See nongovernment organizations (NGOs).