Third World
மூன்றாம் உலகம்
தமிழ் விளக்கம்
மூன்றாம் உலக நாடுகள் என்பது, பொதுவாகப் பொருளாதார ரீதியில் பின்தங்கிய, வளர்ச்சியடையாத நாடுகளைக் குறிக்குமென்றாலும், உண்மையில் பனிப்போர் காலத்தில் அணிசேராத நாடுகளைக் (1. அமெரிக்க, ஐரோப்பியவுடன் இணைந்த NATO ஒப்பந்த நாடுகள், 2. கம்யூனிச நாடுகளோடு இணைந்த வார்சா ஒப்பந்த நாடுகள்) குறிக்கப் பயன்படுத்திய சொல். முதலாம் உலக நாடுகள் - அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் NATO ஒப்பந்த நாடுகள். இரண்டாம் உலக நாடுகள் - ரஷ்யா, சீனா கம்யூனிச வார்சா ஒப்பந்த நாடுகள். மூன்றாம் உலக நாடுகள் - மேற்சொன்னவற்றைத் தவிர்த்த நாடுகள்.
மேற்கத்திய முதலாளிய நாடுகள் முதல் உலகத்தைச் சேர்ந்தவை. கியூபா, வியட்நாம், சீனா போன்ற நாடுகளை சோசலிச நாடுகள் எனப் பட்டியலிடப்பட்டு அவற்றை இரண்டாம் உலக நாடுகள் என்பர். மேலே கூறியவற்றைத் தவிர்த்த ஆசிய, ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகள் மூன்றாம் உலக நாடுகள் எனப்படும்.
பார்க்க: developing countries - வளரும் நாடுகள் - வேளாண்மையை முக்கியப் பொருளாதாரச் செயலாகக் கொண்ட, குறைந்த தனிநபர் வருமானமுள்ள நாடுகள், தொழிமயமாதலின் மூலம் பொருளாதார முன்னேற்றமடைய முயலும் நாடுகள். வளர்ந்துவரும் நாடுகள் எனப்படுபவை குறிப்பிட்ட சில அளவுகளின்படி குறைந்த வளர்ச்சித் தரத்தைக் காட்டும் நாடுகளாகும். வளர்ந்த நாடுகள், வளர்ந்துவரும் நாடுகள் என்பவற்றை வேறுபடுத்திக் காட்ட உலகளவில் ஒரு தனியான பொருத்தமான வரைவிலக்கணம் அறியப்படாமல் இருப்பதனால், வளர்ச்சித் தரம் மிகவும் வேறுபட்டு அறியப்படுகின்றது. சில வளர்ந்துவரும் நாடுகள் உயர் சராசரி வாழ்க்கைத்தரத்தைக் கொண்டுள்ளன. ஏனைய வளர்ந்துவரும் நாடுகளை விட மேம்பட்ட பொருளாதாரத்தைக் கொண்டிருப்பினும், முழுமையாக வளர்ந்த நாடுகளில் ஒன்று என்பதை எடுத்துக் காட்ட முடியாத நாடுகள், புதிய சொல்லான, புதிதாகத் தொழில் மயமாதலுக்கு உட்படும் நாடுகள் (newly industrialized nations) என அழைக்கப்படுகின்றன
ஐக்கிய நாடுகள் சபையின் ஏழாவது செயலாளரான கோபி அன்னான் 'வளர்ந்த நாடு என்பது தன் நாட்டு மக்கள் அனைவரும், சுதந்திரமான, வளமான ஒரு வாழ்க்கையை வாழக் கூடிய பாதுகாப்பான சூழல் / சூழலை ஏற்படுத்திக் கொடுக்கும் நாடாகும்' என்று விளக்கியிருக்கின்றார். ஐக்கிய நாடுகள் அவையின் புள்ளிவிபரவியல் பிரிவானது வளர்ந்த நாடுகள், வளர்ந்துவரும் நாடுகளை வேறுபடுத்திக் காட்டும் சரியான வரைமுறையைக் கொண்டிருக்கவில்லை. மேலும் இவ்வகையான வளரும் நாடுகள், வளர்ந்துவரும் நாடுகள் என்ற பிரிவானது புள்ளியியல் விபரங்களை இலகுவாக்கவேயன்றி, ஒரு நாடானது தனது வளர்ச்சி நோக்கிய பாதையில் என்ன நிலையில் உள்ளதென்பதை தீர்மானமாக நிச்சயித்துக் கூறுவதாக அமைய வேண்டிய அவசியமில்லை எனவும் குறிப்பிட்டிருக்கின்றது..

English
The nations of the world that are economically underdeveloped but growing. The term derives from these nations' expressed nonalignment with the Western and Eastern-bloc nations (first and second worlds). Third World countries are distinguished from Fourth World countries (which have few resources and little hope of development) by regular increases in literacy rates, per capita income, financial reserves, and use of natural resources. Examples of Third World countries are India, Peru, Nigeria, and Egypt. See also developing countries and underdeveloped nations.