thought disorders

சிந்தனைக் கோளாறுகள்

தமிழ் விளக்கம்

எண்ண மருட்சி (இல்லாதது இருப்பது போலத் தோன்றும் தோற்றம் - hallucination), மனத்தெளிவின்மை அல்லது மனப்பிராந்தி (delusion), தொடர்பற்றுப் பேசுவது, உரையாடுவது அல்லது பதிலளிப்பது (loose association), சித்தப்பிரமை (paranoid ideation), தொடர்பற்ற எண்ண ஓட்டம் (flight of ideas), மற்றவர்கள் தன்னைக் குறிப்பிட்டு பேசுவதாக நினைத்துக்கொள்ளும் பிரமை (ideas of reference) போன்றவை சிந்தனைக் கோளாறின் அறிகுறிகளாகும். இது தன்னம்பிக்கை இல்லாதவர்களிடம் மருட்சியையும், மனச் சிதைவையும் பிற ஆளுமைக் கோளாறுகளையும் உருவாக்கிவிடும்.

English

Disturbances in the process and content of one's thinking, including such patterns as hallucination, delusion, loose association, paranoid ideation, flight of ideas, and ideas of reference. Thought disorders may be symptomatic of organic mental disorders or of schizophrenia.