Thrifty Food Plan (TFP)

சிக்கன / செம்மையான உணவுத் திட்டம்

தமிழ் விளக்கம்

அமெரிக்க அரசின் உணவு அடையாளச் சீட்டு (Food Stamp Program) வழங்கு திட்டத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் எவ்வளவு மதிப்புள்ள உணவுப் பொருட்கள் வழங்கப்படவேண்டுமென்பதற்காக, அந்த திட்டத்தைச் செயல்படுத்திய அமெரிக்க அரசின் வேளாண்மைத் துறை நிர்ணயித்த உணவு அளவு. இது இரண்டு முழாள்களையும் இரண்டு குழந்தைகளையும் கொண்ட நான்கு பேர்கொண்ட குடும்பத்திற்குத் தேவைப்படும் தினசரி உணவுத் தேவையின் அடிப்படையில் கணக்கிடப்பட்டது. குடும்ப உறுப்பினர்கள் சிலரின் பிரத்யேக உணவுத் தேவைகளையோ, நோய்வாய்ப்பட்டவர்களின் உணவுத் தேவைகளையோ அல்லது வளரிளம் பருவத்தினரின் உணவுத் தேவைகளையோ கவனத்தில் கொள்ளாது தயாரிக்கப்பட்ட திட்டமென்று விமர்சிக்கப்பட்டது.

English

A system devised by the U.S. Department of Agriculture (USDA) and used to determine the amount of Food Stamp program benefits each family can receive. The TFP for a four-person family is based on the RDAs (required daily allowances) of two adults and two preadolescent children. The plan is often criticized as being too meager and not taking into account different family needs such as hungry teenagers or people with special health problems.