tic
நடுக்கம், நடுங்குகை
தமிழ் விளக்கம்
தசை நடுக்கம் (Tic) அல்லது சொடுக்கு அல்லது தசை இழை அனிச்சை இயக்கம் என்பது குறிப்பிட்ட சில தசை இழைகளில் திடீரென தன்னிச்சையாக, ஒரே மாதிரியாக, அனேகமாக அடுக்காகத் தோன்றும், சீரற்ற, கட்டுப்படுத்தக் கடினமான தசை நடுக்கம் அல்லது துடிப்பு ஆகும். வயிற்றிலோ, அல்லது கால்விரல் நுனிகளிலோ, கண் இமைகளிலோ இவ்வகையான இயக்கத் துடிப்பு ஏற்படுவதுண்டு. சில சமயம் தொண்டைத் தசைகளில் ஏற்படும் இவ்வகைத் துடிப்பில் குரலைச் சரிப்படுத்திக் கொள்ளவேண்டி நேருவதும் உண்டு. இவ்வகையான பல தசை நடுக்கங்கள் வெளியிலிருந்து பார்ப்பவர் கண்களுக்குத் தெரிவதில்லை.
English
A recurrent, uncontrollable, and inappropriate muscle movement of a part of the body.