tic disorder

நடுக்கச்சீர்கேடு

தமிழ் விளக்கம்

தசை நடுக்கம் (Tic) அல்லது சொடுக்கு அல்லது தசை இழை அனிச்சை இயக்கம் என்பது குறிப்பிட்ட சில தசை இழைகளில் திடீரெனத் தன்னிச்சையாக, ஒரே மாதிரியாக, அனேகமாக அடுக்காகத் தோன்றும், சீரற்ற, கட்டுப்படுத்தக் கடினமான தசை நடுக்கம் அல்லது துடிப்பு ஆகும். வயிற்றிலோ, அல்லது கால்விரல் நுனிகளிலோ, கண் இமைகளிலோ இவ்வகையான இயக்கத் துடிப்பு ஏற்படுவதுண்டு. சில சமயம் தொண்டைத் தசைகளில் ஏற்படும் இவ்வகைத் துடிப்பில் குரலைச் சரிப்படுத்திக் கொள்ளவேண்டி நேருவதும் உண்டு.
தசை நடுக்கங்கள் 1) இலகுவானது, 2) சிக்கலானது என்றும், 1) இயக்கத்துடிப்பு 2) ஒலித்துடிப்பு என்றும் பிரிக்கப்படுகின்றன. இயக்கத்துடிப்பு என்பது தனியான தசைக் கூட்டத்தில் ஏற்படும் அசைவினால் உண்டாகும் துடிப்பாகும். ஒலித்துடிப்பு என்பது மூக்கு, வாய், தொண்டையில் ஏற்படும் வளி அசைவினால் தோன்றும் தன்னிச்சையான ஒலிகளை ஏற்படுத்தும் அசைவாகும். பொதுவாக இலகுவான தசை நடுக்கம் இல்லாமல் சிக்கலான தசை நடுக்கம் மிக அரிதாகவே தோன்றும். சிக்கலான தசை நடுக்கத்தை, ஒரு நிர்ப்பந்தத்தில் கத்துதல் அல்லது கூச்சலிடுதல் போன்ற, தன் விருப்பமின்றி ஒரு நிர்ப்பந்தத்துக்குட்பட்டு செய்யும் செயல்களிலிருந்து வேறுபடுத்துவது கடினம் என்று கருதப்படுகின்றது.
இலகுவான தசை இழை அனிச்சை இயக்கம், இலகுவான அனிச்சை இயக்கத் துடிப்பு (Simple motor tics)
குறிப்பிட்ட தசையில் திடீரெனத் தோன்றும், குறுகிய, கட்டுப்படுத்த கடினமான கண் சிமிட்டல், தலையாட்டுதல் (தலையை இழுத்தல் போன்ற அசைவு), தோளை உயர்த்துதல் போன்ற அனிச்சையான, அர்த்தமற்ற அல்லது அவசியமற்ற கை கால் அசைவுகள் ஆகும்.
இலகுவான அனிச்சை ஒலிப்பு துடிப்பு (Simple phonic tics)
இவை குரலைச் சரிப்படுத்தல், உறுமுதல் அல்லது கத்துதல், நுகர்தல் அல்லது மோப்பம் பிடித்தல் போன்ற சத்தம் அல்லது ஒலிகளை ஏற்படுத்தும் குறிப்பிட்ட இடத்திலுள்ள தசைகளில் ஏற்படும் துடிப்பாகும்.
சிக்கலான தசை இழை அனிச்சை இயக்கம், சிக்கலான அனிச்சை இயக்கத் துடிப்பு (Complex motor tics)
இவை ஒரு நபர் ஒரு குறிப்பிட்ட நோக்கத்துடன் செய்வது போன்ற தோற்றத்தைக் கொடுக்கக் கூடிய, ஓரளவு நீண்ட நேரத்துக்குரிய அசைவாகும். இந்த அசைவானது தனி ஒரு தசையில் அல்லாமல் சில தசைகளில் ஒரே நேரத்தில் ஏற்படும் ஒரு ஒருங்கிணைந்த அசைவுபோன்று தோன்றும். உதாரணமாக நுணுக்கமாக தனிவிதமாக பொருட்களை அல்லது நபர்களைத் தொடுவது, துணிகளை இழுப்பது போன்றவை.
சிக்கலான அனிச்சை ஒலிப்பு துடிப்பு (Complex phonic tics) -குறிப்பாக வேறொருவர் சொன்ன சொல்லை திரும்பக் கூறுவது (echolalila), முதலில் சொன்ன சொற்களை திருப்பியும் சொல்வது (palilalia), வாசித்த சொற்களை மீண்டும் சொல்வது (lexilalia), சமூகத்தால் விலக்கப்பட்ட சொற்கள் அல்லது சொற்றொடர்களைக் கொண்ட தொடை நயச்சொல், புலம்பல், நையாண்டி, மற்றும் இன்னும் பல அனிச்சை ஒலிப்புக்களைச் சொல்வது (corolalila) போன்றவை இவ்வகையான தசைத் துடிப்புகளால் ஏற்படுவனவாகும்.

English

A disorder characterized by involuntary rapid muscle movements or vocalizations. This disorder includes the transient tic disorder, chronic motor or vocal tic disorder, and Tourette's disorder.