time-limited hot line
கால வரையறுக்குட்பட்ட தொலைபேசித் தொடர்பு வசதி
தமிழ் விளக்கம்
ஒரு சமூக நிகழ்வைப் பற்றி சமுதாயத்தின் அக்கறையைத் தூண்டவோ, சமூகப் பிரச்சனை தொடர்பான ஒரு தொலைக்காட்சித் தொடரை அடுத்தோ, அரசியல் இயக்கங்கள் புதிய ஆதரவாளர்களை திரட்ட வேண்டிய தேவை ஏற்படும்போது குறுகிய காலத்திற்கு செய்து கொடுக்கப்படும் கட்டணமில்லாத் தொலைபேசித் தொடர்பு.
பார்க்க: Hot line - அவசரகாலத்திற்கான தொலைபேசி - துயரத்தில் உள்ளவர்களுக்கு உதவி செய்யத் தொண்டு நிறுவனங்கள் மூலம் இயக்கப்படும் தொலைபேசித் தொடர்பு. நெருக்கடியிலிருப்பவர்களும், உதவி தேவைப்படுபவர்களும் தொடர்புகொள்ள உதவும் தொலைபேசி. சமூகப்பிரச்சனைகளாலோ, மனச் சோர்வினாலோ பாதிக்கப்பட்ட நபர்கள் தொடர்புகொண்டு உதவி பெற ஏற்படுத்தப்பட்ட தொலைபேசித் தொடர்பு. பிரச்சனைக்குள்ளானவர்கள் தொடர்புகொள்ளும் போது அதைக் கவனத்துடன் கேட்டறிந்து பொருத்தமான முறையில் ஆற்றுப்படுத்துமளவு அனுபவமுள்ளவர்கள் இத் தொலைபேசியின் மூலமாக பதிலளிப்பார்கள் அதீத மனச்சோர்வினால் தற்கொலை செய்துகொள்ள நினைப்பவர்கள், குடும்ப சச்சரவுகளினால் வன்முறைக்கு உள்ளானவர்கள், வீட்டைவிட்டு வெளியேறியவர்கள், வேறுவகையில் உதவியோ தகவலோ தேவைப்படுபவர்கள், உதவியின் பொருட்டு தொலைபேசியில் தொடர்புகொள்ளும் போது, நிபுணர்களோ அல்லது தன்னார்வத் தொண்டர்களோ தொலைபேசி வழியாக அவர்களிடம் மனமாற்றம் ஏற்படும்படியான ஆறுதல் வார்த்தைகள் சொல்லியும், அவர்களுக்குத் தேவைப்படும் உதவிகளைப் பெற வழிகாட்டியும் பிரச்சனையிலிருந்து விடுபட உதவுவார்கள்.

English
A hot line or help line system set up to exist for only a short duration, during which intense, focused community attention can be given. For example, they can be set up for a few days after television specials or telethons dealing with certain problems, political events that seek new supporters, and holiday season programs to attract year-round volunteers.