Title VII

மனித உரிமைகள் சட்டம் ஷரத்து VII

தமிழ் விளக்கம்

1964 ஆம் வருடத்திய அமெரிக்காவின் மனித உரிமைகள் சட்டப்படி, சமத்துவமான வேலை வாய்ப்பிற்கு உத்தரவாதமளிக்க உருவாக்கப்பட்ட சம வேலை வாய்ப்பிற்கான ஆணையத்தை உருவாக்கிய சட்டச் ஷரத்து.
பார்க்க: Equal Employment Opportunity Commission - சம வேலை வாய்ப்பிற்கான ஆணையம். - சம வேலைவாய்ப்பிற்கான ஆணையமென்பது பணியிடப் பாகுபாடுகளை அகற்றக் கொண்டுவரப்பட்ட சட்டத்தை அமல்படுத்தும் நிறுவனம். இந்த நிறுவனம் இனம், நிறம், பூர்வீகம், மதம், வயது, இயலாமை, பாலினம், மரபணுக்கூறுகளை காரணம் காட்டி செய்யப்படும் பாகுபாடுகள் பற்றி செய்யப்படும் புகார்களைப் பற்றி விசாரிக்க அதிகாரம் கொண்டது. பாகுபாடு பற்றி புகார் செய்பவர்கள், அதை எதிர்த்துக் குரல் கொடுப்பவர்களின் மீது பழிவாங்கும் நடத்தைகள் பற்றிய புகார்களையும் இந்நிறுவனம் விசாரிக்கும். ஓரினச் சேர்க்கையாளர், தன்பாலினச் சேர்க்கையாளர், இருபால் இச்சையாளர் மீது காட்டப்படும் பாகுபாட்டையும், திருநங்கைகளின் பாலின அடையாளத்தை அங்கீகரித்தும் இச்சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது. பாகுபாடு பற்றிய ஆயிரக்கணக்கான புகார்களை மத்தியஸ்தம் செய்து வைத்து, பிரச்சனைகளை இந்நிறுவனம் சுமுகமாகக் கையாண்டுள்ளது. பாகுபாட்டினால் பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக வழக்குத் தொடரவும் இந்த ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளது.
பார்க்க: 706 agencies - 706 ஆம் பிரிவு நிறுவனம் அல்லது சம வேலை வாய்ப்பிற்கான ஆணையம் - சம வேலைவாய்ப்பிற்கான ஆணையமென்பது பணியிடப் பாகுபாடுகளை அகற்ற கொண்டுவரப்பட்ட சட்டத்தை அமல்படுத்தும் நிறுவனம். இது 1964 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட அமெரிக்க மனித உரிமைச் சட்ட 706 C பிரிவின் கீழ் ஆமைக்கப்பட்டதால் இதை 706 நிறுவனம் என்றும் அழைப்பர். இந்த நிறுவனம் இனம், நிறம், பூர்வீகம், மதம், வயது, இயலாமை, பாலினம், மரபணுகூறுகளை காரணம் காட்டி செய்யப்படும் பாகுபாடுகள் பற்றி செய்யப்படும் புகார்கள் பற்றி விசாரிக்க அதிகாரம் கொண்டது. பாகுபாடு பற்றி புகார் செய்பவர்கள், அதை எதிர்த்து குரல் கொடுப்பவர்களின் மீது பழிவாங்கும் நடத்தைகள் பற்றிய புகார்களையும் இந்நிறுவனம் விசாரிக்கும். ஓரினச் சேர்க்கையாளர், தன்பாலின சேர்க்கையாளர், இருபால் இச்சையாளர் மீது காட்டப்படும் பாகுபாட்டையும், திருநங்கைகளின் பாலின அடையாளத்தை அங்கீகரித்தும் இச்சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது. பாகுபாடு பற்றிய ஆயிரக்கணக்கான புகார்களை மத்தியஸ்தம் செய்து வைத்து, பிரச்சனனைகளை இந்நிறுவனம் சுமுகமாகக் கையாண்டுள்ளது. பாகுபாட்டினால் பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக வழக்குத் தொடரவும் இந்த ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளது
பார்க்க: Penetration Ratio - ஊடுருவல் விகிதம், உட்புகல் விகிதம் - ஒரு நிறுவனப் பணியாளர்களில் குறிப்பிட்ட சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த எத்தனை பேர் உள்நுழைந்திருக்கின்றார்கள் (வேலை வாய்ப்பளிக்கப்பட்டிருக்கின்றது) என்பதைக் கணக்கிடும் முறை. அமெரிக்காவின் சம வேலை வாய்ப்பிற்கான ஆணையம் ஒவ்வொரு நிறுவனமும், சிறுபான்மை இனத்தவரிலிருந்து எத்தனை பேரை வேலைக்கு எடுத்திருக்கின்றார்கள் என்பதை இதைக்கொண்டு பரிசீலனை செய்கிறது.

English

The section of the Civil Rights Act of 1964 that guarantees equal employment opportunity and created the Equal Employment Opportunity Commission (EEOC) to prevent employment discrimination because of race, color, religion, gender and, in some cases, sexual orientation. See also 706 agencies.