Title XX

ஷரத்து XX

தமிழ் விளக்கம்

1935 ஆம் ஆண்டைய சமூகப் பாதுகாப்புச் சட்டத்தில், 1975 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட திருத்தம். இந்த ஷரத்தின்படி அமெரிக்க மாநில அரசுகள் தனிப்பட்ட / தனி நபருக்கான / நேர்முக சமூக சேவைகளுக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க வழிசெய்தது. இதை அடுத்து அறிமுகப்படுத்தப்பட்ட தனிப்பட்ட முயற்சி எடுத்து வேலை வாய்ப்பு பெறுவதற்கான சூழலை ஏற்படுத்துதலுக்கான சட்டம் மைய அரசின் பங்களிப்பை வெகுவாகக் குறைத்துக் கொள்ள வழி கோலியது.
பார்க்க: personal social services programs - தனிப்பட்ட / தனி நபருக்கான / நேர்முக சமூக சேவைகள் - தனி நபர்களிடமும், தனி நபர்களுக்கிடையேயும் அவர்களுடைய உறவுகள் மற்றும் சூழ்நிலைகளைச் செழுமைப்படுத்தவும், சமூக வாழ்வில் ஒரு நிறைவை ஏற்படுத்தவும் செய்யப்படும் சேவைகள். இது எல்லோருக்குமாக வழங்கப்படும் சேவைகளான வருமானப் பராமரிப்பு (income maintenance program), கல்வி, வேலைவாய்ப்பு, வீட்டுவசதி, மருத்துவ வசதி போன்ற திட்டங்களிலிருந்து வேறுபட்ட, ஆலோசனை கூறல், வழிகாட்டுதல், பரஸ்பர உதவியை மேம்படுத்தும் சுய உதவிக்குழுக்கள், குடும்பக்கட்டுப்பாடு, முதியோர் மற்றும் குழந்தைகளுக்கான தனிப்பட்ட சேவைகளை உள்ளடக்கியது.

English

The 1975 provision (P.L. 93-647) added to the Social Security Act of 1935 to separate income transfer payments from personal social services programs and to encourage the states to take a larger part in developing funding for these programs and to put a ceiling on federal funding for social services. The program was greatly reduced and curtailed by subsequent legislation, especially the Personal Responsibility and Work Opportunity Reconciliation Act of 1996 (EL. 104-193).