Titmuss, Richard (1907-1973)

ரிச்சர்ட் டிட்மஸ் (1907-1973)

தமிழ் விளக்கம்

ரிச்சர்ட் டிட்மஸ் (1907-1973) - இலண்டன் பொருளாதாரப் பள்ளியில் பேராசிரியராகப் பணியாற்றிய இவர், சமூக நிர்வாகம் (தற்போது சமூகக் கொள்கை - Social Policy) என்ற பாடப்பிரிவு துவக்கப்படுவதற்குக் காரணமாயிருந்தவர். தலைசிறந்த சமூகப்பணிக் கல்வியாளராக, நிர்வாகியாக பெயர்பெற்ற இவர் பல சமூக நலக் கொள்கைகள் அறிமுகமாகக் காரணமாயிருந்தார். சமூக நலக் கோட்பாடுகளில் சர்வதேச நிபுணராயிருந்ததால், பலநாடுகளில் சமூகநலத் திட்டங்கள் அறிமுகமாகக் காரணமாயிருந்தார். சமூக நலக்கொள்கை வடிவமைப்பதில் பிரச்சனைகள் (Problems of Social Policy), வருமானப் பகிர்வு மற்றும் சமூக மாற்றம் (Income Distribution and Social Change) போன்ற முக்கியமான புத்தகங்களை எழுதியுள்ளார்.

English

British scholar, administrator, and developer of many social welfare programs and social work education programs. He had international influence on the development of social welfare theory and practice and wrote many of the field's most important works, including Problems of Social Policy (1950) and Income Distribution and Social Change (1962).