tolerance

சகிப்புத்தன்மை, பொறுத்தமைவுப்பண்பு, ஏற்றாளும் திறன், இடங்கொடுப்பு, தாங்குதிறன்

தமிழ் விளக்கம்

சகிப்புத்தன்மை என்ற சொல்பிரயோகம், அரசியல், சமூகம், கலாச்சாரம் போன்ற பலதளங்களில் பயன்படுத்தப்பட்டாலும், பொதுவாக அதை போதை மருந்தின் தாங்குதிறனைக் குறிக்கவே சமூகப்பணியாளர்கள் பயன்படுத்துகிறார்கள். போதை மருந்துகளைத் தொடர்ந்து உபயோகிக்கும் போது, அதன் விளைவுகளை (உளஎழுச்சி மற்றும் உளமடக்கி) தாங்கிக்கொள்ளும் சக்தி உடல், மன ரீதியாக உருவாகி அதிகரிக்கும். மருந்தை உபயோகித்த ஆரம்ப கட்டத்தில், அதன் விளைவுகள் விரைவாக வெளிப்பட்ட மாதிரி காலப்போக்கில் வெளிப்படாது. ஆரம்ப நிலையில் மருந்து கொடுத்த விளைவுகளை அனுபவிக்க வேண்டுமானால், அடிக்கடியோ அல்லது அதிக அளவு மருந்தையோ பயன்படுத்தவேண்டும். இதையே மருந்தின் மீதான சகிப்பு தன்மை அல்லது மருந்தைத் தாங்கும் திறன் (tolerance) என்கிறோம்.

English

An individual's capacity to endure or resist the effects of certain drugs. Because drug response tends to decrease with repeated doses, the user increases the amount taken to get the same effect.