tort

பொல்லாங்குக்குற்றம், தீங்கு, அநியாயம், தீங்கு, குற்றச்செயல், சட்ட விரோதம், அநீதி

தமிழ் விளக்கம்

ஒருவருக்கு மனதளவிலோ, உடலளவிலோ பாதிப்பு ஏற்படுத்தும்படியோ அல்லது உடமைகள் சேதமடையும்படியோ அறிந்தோ அறியாமலோ செய்யப்படும் செயல்களுக்கு, நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்து இழப்பீடு பெறுவதற்குத் தகுதியுள்ள குற்றச் செயல்கள். முறைகேடான செயல்களில் ஈடுபடுதல், அவதூறு செய்தல், பொய்யாக பழிசுமத்தி நற்பெயருக்கு கேடு விளைவித்தல் ஆகியவை பொல்லாங்குக் குற்றத்தில் அடங்கும். சட்டப்படி செய்துகொண்ட ஒப்பந்தத்தை மீறுதல், குற்றச் செயல்கள் பொல்லாங்குக் குற்றங்களாகக் கருதப்படுவதில்லை.

English

A wrongful act that harms someone and for which the injured party has the right to sue for damages in civil courts. Examples include malpractice, libel, and slander. Crime and breach of contract are not considered torts.