torture

சித்திரவதை, பலவகையில் வேதனைப்படுத்துதல் / துன்புறுத்தல், வதை, வதம், கொடுமை, கொல்லாக் கொலை, குரூரவதை, வேதனைப்படுத்திக் கொல்லுதல், கடுநோவு

தமிழ் விளக்கம்

அரசின் அனுமதியுடனோ அல்லது ஆணையுடனோ அல்லது அரசு அதிகாரியின் நேரடி அல்லது மறைமுக ஈடுபாட்டுடனோ, ஒருவரிடமிருந்தோ அல்லது அவர் தொடர்புடையவரிடமிருந்தோ ஏதேனும் தகவலைப் பெறவோ அல்லது ஒப்புதல் பெறவோ, அவர்களின் உடலுக்கோ மனதுக்கோ கடும் வலி அல்லது தாக்கம் ஏற்படுத்துகின்ற செயல், ஒருவரோ அல்லது அவர் தொடர்புடையவரோ செய்த அல்லது செய்ததாகக் கருதப்படும் செயலுக்குத் தண்டனையாகத் துன்புறுத்துவது, ஒருவரையோ அல்லது அவருக்குத் தொடர்புடையவரையோ அடிபணிய வைக்க அல்லது அவமதிக்க, அல்லது பிறரிடமிருந்து பாகுபடுத்திக்காட்டச் செய்யப்படும் வதை, சித்திரவதையாகக் கொள்ளப்படும். சட்டப்படி நிறைவேற்றப்படும் செய்கைகளிலான வலியோ துன்பமோ சித்திரவதையாகக் கருதப்படாது. அரசு அனுமதிபெற்ற சித்திரவதை தவிர, தனிநபர்களும் கூட்டங்களும் கூட மேற்கண்ட காரணங்களுக்காக சித்திரவதையில் ஈடுபடலாம். தவிர பிறரின் துன்பங்களைக் கண்டு மகிழும் மன வக்கிரங்களுக்காக ஒருவரை சித்திரவதை செய்வதும் உண்டு. பெரும்பாலான நாடுகளில் பன்னாட்டுச் சட்டம் மற்றும் உள்நாட்டுச் சட்டங்களால் சித்திரவதை தடை செய்யப்பட்டுள்ளது. 81 உலகநாடுகளில் சித்திரவதை கடைபிடிக்கப்படுவதாகப் பன்னாட்டு மன்னிப்பு அவை (Amnesty International) கூறுகிறது. வரலாறு நெடுக, மனிதர்களை அடிபணிய வைக்கவும் மூளைச்சலவை செய்யவும் சித்திரவதை பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. 21ஆம் நூற்றாண்டில் ஐ. நா உலக மனித உரிமைகள் சாற்றுரை விதி 5-இன்படி, சித்திரவதை மனித உரிமைகளை மீறியதாகக் கருதப்படுகிறது. மூன்றாவது மற்றும் நான்காவது ஜெனீவாச் சாசனத்தில் ஒப்பிட்ட அனைத்து நாடுகளும் போர்க் கைதிகளை சித்திரவதை செய்வதில்லை என ஒப்புக்கொண்டுள்ளன. 145 நாடுகள் சித்திரவதைக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சாசனத்தில் கையெழுத்திட்டுள்ளன. சித்திரவதைக்கு எதிரான தேசிய, பன்னாட்டு சட்டப்பாதுகாப்பு இருந்தாலும் பல நாடுகளில் சித்திரவதை தொடரவே செய்கிறது.

English

An extreme form of deliberate and strategic violence inflicted on victims to extract information or compliance, to intimidate the victim's supporters, or to gratify the individual perpetrators. Torture is practiced by the governments of at least 110 nations and by countless subnational political groups and individuals. Most survivors must cope with the physical injury as well as recurring symptoms of posttraumatic stress disorder (PTSD).