total quality management (TQM)
முழுத்தர மேலாண்மை
தமிழ் விளக்கம்
TQM என்பதை முழுத்தர மேலாண்மை, முழுத் தரம் பேணுதல் என்று பொருள் கொள்ளலாம். முழுத்தரம் பேணுதல் என்பது முழுத்தரம் பேண எடுக்கும் கருத்துகளையும், செயல்களையும் ஒருசேரக் குறிக்கும். முழுத் தர மேலாண்மை (TQM ) என்பது அனைத்து நிறுவன செயலாக்கங்களிலும் தரத்தின் விழிப்புணர்வை உட்புகுத்தலை நோக்கமாகக் கொண்ட நிறுவன மேலாண்மை உத்தியாகும். தொழிலகங்கள், கல்வி, மருத்துவமனைகள், கால் சென்டர்கள், அரசு நிறுவனங்கள் மற்றும் சேவை நிறுவனங்கள் என்று பல நிறுவனங்களிலும் TQM பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. மேலாண்மை என்பது திட்டமிடல், ஒருங்கிணைத்தல், இயக்குதல், கட்டுப்படுத்தல் மற்றும் காப்புறுதி ஆகியவற்றை உள்ளடக்கியது. மொத்தத் தர மேலாண்மை என்பது மேலே கண்ட மேலாண்மைச் செயல்பாடுகள் எல்லாவற்றிலும் தரத்தைப் பின்பற்றுவது மட்டுமல்ல அது பங்குதாரர்கள், வாடிக்கையாளர்கள், நுகர்வோர்கள் தேவையை நிறைவுசெய்ய எடுக்கப்படும் முயற்சிகளையும் உள்ளடக்கியதாகும். முழுத்தர மேலாண்மை என்பது (TQM) தரத்தினை மையமாகக் கொண்ட ஒரு நிறுவனத்திற்கான மேலாண்மை அணுகுமுறையாகும். மேலும் அதன் உறுப்பினர்கள் அனைவரின் பங்களிப்பினை அடிப்படையாகக் கொண்டதும் மற்றும் வாடிக்கையாளரின் மன நிறைவின் மூலமாக அடையும் நீண்டகால வெற்றியை இலக்காகக் கொண்டதுமாகும் அது நிறுவனத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் சமுதாயத்திற்கும் பயனளிப்பதும் ஆகும் என்று தரநிர்ணயத்திற்கான சர்வதேச அமைப்பு (ISO) வரையறை செய்துள்ளது.
English
An orientation to management of organizations, including social services agencies, in which quality, as defined by clients and consumers, is the overriding goal, and client satisfaction, employee empowerment, and long-term relationships determine procedures. TQM change is continuous and accomplished by teamwork; organizational communication goes in all ways, and long-term relationships with providers are developed (rather than encouraging them to compete with one another solely on the basis of price).