tough-love parenting
கண்டிப்பும் அன்புமுள்ள பெற்றோர்
தமிழ் விளக்கம்
சிறுவர்களும் வளரிளம் பருவத்தினரும் பொறுப்பாக வளர வேண்டுமென்றால் அவர்கள் கண்டிப்புடனும் அதே நேரத்தில் அன்புடனும், அவர்களுடைய தவறுகள் பெரிதுபடுத்தப்படாமலும் வளர்க்கப்பட வேண்டுமென்ற அனுமானத்தினடிப்படையில் கடைப்பிடிக்கப்படும் குழந்தை வளர்ப்பு முறை. அன்பும் கண்டிப்புமான வளர்ப்பு இந்த முறைகள், குழந்தைகளிடமிருந்து எதிர்பார்க்கப்படும் குறைந்த பட்ச நடத்தை விதிகளை எடுத்துரைத்து அதன்படி நடக்க வற்புறுத்துகிறது. எதிர்பார்க்கப்படும் நடத்தைகளை வெளிப்படுத்தும்போது அவர்களுக்கு சலுகைகளும், அவ்வாறு நடக்காத போது சலுகைகள் மறுக்கப்படுவதும் இந்த வளர்ப்பு முறையின் அம்ஸமாகும். பல சமுதாயங்களில் பெற்றோர்களடங்கிய சுயவுதவிக் குழுக்கள் கண்டிப்பான குழந்தை வளர்ப்புமுறைகளை எப்படிப் பின்பற்றுவது, பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் பரஸ்பரம் எப்படி உதவுவது பற்றிய கருத்துகளை, அனுபவங்களை பரிமாறிக் கொள்ள உதவுகிறது.
English
The parenting style based on the premise that some children and adolescents need firm discipline as well as love and forgiveness. Tough-love programs help parents establish minimum acceptable standards for their children's behavior and show them techniques for enforcing those standards. Tough-love emphasizes controls on children by providing and depriving them of privileges based on their conformity with explicit rules. Many communities have tough-love self-help groups comprising parents who provide mutual support to reinforce their goals and techniques with their children.