Tourette's disorder
டூரெட்ஸ் சீர்கேடு
தமிழ் விளக்கம்
ஜார்ஜ் கில்லஸ் டெ லா டூரெட் (Georges Gilles de la Tourette) என்ற பிரெஞ்ச் நரம்பியல் நிபுணர் பெயரால் வழங்கப்படும் ஒருவகையான தசை நடுக்கச் சீர்கேடு. தசை நடுக்கம் (Tic) அல்லது சொடுக்கு அல்லது தசை இழை அனிச்சை இயக்கம் என்பது குறிப்பிட்ட சில தசை இழைகளில் திடீரென தன்னிச்சையாக, ஒரே மாதிரியாக, அனேகமாக அடுக்காகத் தோன்றும், சீரற்ற, கட்டுப்படுத்தக் கடினமான தசை நடுக்கம் அல்லது துடிப்பு ஆகும். இந்த நோயுள்ளவர்கள் முகச் சுளிப்பு, கைகால்களில் ஏற்படும் கட்டுப்படுத்தமுடியாத தசை நடுக்கம், மிகை இயக்கக் கோளாறு, நிதானமிழந்து நடந்துகொள்ளல், கொச்சை மற்றும் அருவருப்பான பாசையில் கத்துதல் போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்துவர். சிறுவயதில் தொடங்கும் இந்தக் கோளாறு வாழ்நாள் முழுதும் நீடித்தாலும், 2 வயதிலிருந்து 13 வயது வரைக்கும் அதிகாமாகப் பாதித்து பின் கொஞ்சம் கொஞ்சமாக தன்னிச்சையாகவோ அல்லது சிகிச்சையாலோ குறையலாம்.
English
A tic disorder manifested in the victim by facial grimacing, abrupt and jerky movements of the limbs, hyperactive behavior, explosive temper, and foul language. Although the disorder is usually lifelong, its symptoms tend to begin in children from ages two to 13, worsen through childhood, and decline in later years. The symptoms may spontaneously remit or cease during adulthood or be controlled successfully with certain drugs. The disorder is also known as "Gilles de la Tourette's disease."