Townsend Plan
டவுண்செண்ட் திட்டம்
தமிழ் விளக்கம்
டவுண்செண்ட் என்ற அமெரிக்க மருத்துவரால் முன்மொழியப்பட்ட முதியோர் ஓய்வூதிய நலத்திட்டம். இத்திட்டம் பிரேரித்தபடி, அறுபது வயதைக் கடந்த, பணிஓய்வு பெற்ற, மீண்டும் பணிக்கு செல்லாமலிருக்க ஒப்புக்கொண்ட முதியவர்களுக்கு மாதமொன்றுக்கு 200 டாலர் ஓய்வூதியமாக வழங்கப்பட வேண்டுமென்றும், இந்த ஓய்வூதியும் அந்த மாத இறுதிக்குள் செலவழிக்கப்பட வேண்டுமென்றும் கூறியது. இதைப் பின்பற்றும்போது இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரித்து, பணச் சுழற்சி ஏற்படும். அதனால் அமெரிக்கப் பொருளாதார மந்தம் குறையும் என்று கூறியது. ஆனால் இத்திட்டத்தை அமெரிக்க ஜனாதிபதியாக அப்போதிருந்த ரூஸ்வெல்ட் முன்னெடுக்கவில்லை என்றாலும். இது பொதுமக்களிடையே மிகப் பிரபலமாகி, அதுகாறும் பெயரளவில் உதவி வழங்கிய முதியோர் ஓய்வூதியத் திட்டங்களின் உதவித் தொகையைக் கணிசமாகக் கூட்ட உதவியது.
English
A proposal, made by Francis Townsend in the early 1930s, advocating federal payments of $200 monthly to all people older than age 60 who agree to retire from work and spend the money within a month. The plan spurred a strong social movement, especially among older people in the United States, and contributed in part to the development of the Social Security Act of 1935.