toxic waste disposal
நச்சுக் கழிவு அகற்றல்
தமிழ் விளக்கம்
நச்சு அல்லது நஞ்சு (poison) என்று பொதுவில் குறிப்பது, உயிரினங்களில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய அனைத்துப் பதார்த்தங்களையும் குறிப்பதாகும். விடம் (venom) என்பது ஒரு உயிரினம் இன்னொரு உயிரினத்தைக் கடிப்பதனால் அல்லது குத்துவதனால் அடுத்த உயிரினுள் செலுத்தப்படும் நச்சுப்பொருள் ஆகும். லுட்விக் பிரீகர் (Ludwig Brieger) (1849-1919) என்ற வேதியியலாளரே நச்சு (Toxin) என்னும் பதத்தை முதலில் அறிமுகம் செய்தவராவார். சில சமயம் இந்த நஞ்சு ஒரு உயிரினத்திலிருந்து உருவாகின்றது என்பதை வலியுறுத்தும் வண்ணம் உயிரியல் நச்சுப்பொருள் (Biotoxin) என்ற பதமும் பயன்படுத்தப்படுகின்றது. சுற்றுச் சூழல் மேலாண்மையில் நச்சு என்பது தொழிற்சாலை உற்பத்தி முறைகளிலிருந்து உருவாகும் இரசாயன எச்சம் அல்லது கசடே நச்சு எனப்படுகிறது. இந்த நச்சுப் பொருட்கள் உருவாக்கும் விளைவுகள், சேதங்கள் அதை எப்படிப் பாதுகாப்பாகக் கையாள்வது என்ற கவலையைச் சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடத்தில் உருவாக்கி, பலவிதமான நச்சகற்றும் முறைகளைப் பின்பற்றத் தூண்டியிருக்கின்றது. நச்சுக் கழிவுகளைக் கண்டபடி சிதறவிடாமல், ஓரிடத்தில் தரையின் மேலோ அல்லது கிடங்குகளுக்குள் குவித்து வைப்பது ஒருமுறை. இது எளிதான, சிக்கனமான நடைமுறை என்றாலும், இந்த முறையில் நச்சுப் பொருட்களிலுள்ள திரவ மற்றும் வாயுக் கழிவுகள் சுற்றுச் சூழலை மாசடையைச் செய்யும். இதற்கு மாற்றாக நச்சுப் பொருட்களிலுள்ள நச்சுத்தன்மையை அகற்றி, அந்த நஞ்சை செயலிழக்கச் செய்தபின் திடவடிவிலோ, திரவ வடிவிலோ அல்லது வாயு வடிவிலோ வெளியேற்றுவது. இது பாதுகாப்பான முறை என்றாலும் செலவுமிக்க முறையாகும். மூன்றாவதாக நச்சுத் தன்மை உருவாகாத மாதிரி, உற்பத்தி முறையிலோ அல்லது மூலப்பொருள் உபயோகத்திலோ மாற்றங்கள் செய்வது.
English
Elimination of the poisonous chemicals that had been the residue of manufactured products. The enormous costs of cleaning up toxic waste sites have led environmentalists and scientists to seek better alternatives. So far the alternatives are to build better dumps, break down the poisons to eliminate their toxicity, and find manufacturing procedures that do not produce the toxins. Building better dumps (by developing landfills with secure liners or systems that recapture any leaked liquids or gasses) is the most economical response in the short term, but it only postpones the problem. Breaking down the poisons, mostly by neutralizing them with heat or other chemicals, is another alternative, but it is proving to be expensive and still wasteful. The best solution-changing the manufacturing process-is underway in many industries, but it is costly and meets with resistance from many groups.