toxoids
நச்சுத் தன்மை நீக்கப்பட்ட நச்சு, வீரியமிழந்த நச்சு, நச்சனையம், நச்செதிர் ஊநீர்
தமிழ் விளக்கம்
1. நோயை உருவாக்கும் நச்சுத் தன்மையுள்ள நுண்ணுயிரினங்கள் நச்சுப் பொருட்களை வெளியிடும். இந்த நச்சுப் பொருட்களை வீரியமிழக்க வைத்து, அதே நோயைத் தடுக்க தயாரிக்கப்படும் தடுப்பூசிகளை நச்சனையம், அல்லது நச்செதிர் ஊநீர் எனலாம். 2. நச்சுப் பொருட்களுக்கு எதிராக மனித உடல் எதிர்ப்புப் பொருளை வெளியிடும். இவ்வெதிர்ப்புப் பொருள் நச்சுப் பொருட்களின் செயல்பாடுகளை நிறுத்தும். இவ்வாறு நிறுத்தப்பட்ட நச்சுப் பொருட்கள் நச்சு எதிர்ப்புப் பொருட்களை (Anti toxin) வெளியிட வல்லது. இதற்கு வீரியமிழந்த நச்சு (Toxoid) என்று பெயர். இந்த வீரியமிழந்த நச்சுதான் தடுப்பு மருந்தாக மனித உடலினுள் செலுத்தப் படுகிறது. இது நச்சு எதிர்ப்புப் பொருட்களை வெளியிட்டு நச்சுப் பொருட்களை அழிக்கிறது; நோய் அழிக்கப்பட்டு உடல்நிலை சீராகிறது.
English
The poisonous waste products of disease-causing micro-organisms that are used to make certain vaccines to protect against specific diseases.