Toynbee Hall

டாயின்பீ ஹால்

தமிழ் விளக்கம்

புகழ்பெற்ற வரலாற்றறிஞரும், சமூகச் சீர்திருத்தவாதியுமான அர்னால்ட் டாயின்பீ நினைவாக, அவர் மீது அபிமானம் கொண்டிருந்த, சாமுவேல் ஏ பார்னெட் அவரின் துணைவியார் ஹென்ரீட அவர்களால், 1884 ஆம் ஆண்டு சமுதாய ஊழியராகமாக டாயின்பீ ஹால் (இல்லம்) தொடங்கப்பட்டது. இது அறவுணர்வோடு பணியாற்றுபவர்களுக்கான படையில்லாமாக விளங்கியது. டாயின்பீ இல்லம் தொடங்கப்பட்டு 20 ஆண்டுகளுக்குள் ஏறக்குறைய 400 க்கும் மேற்பட்ட சமுதாய ஊழியரகங்கள் அமெரிக்காவெங்கும் உருவாக வழியமைத்து, மிகப் பெரிய அளவில் சமுதாய மாற்றத்திற்கு வித்திட்டது. டாயின்பீ இல்லமும் அதைப் பின்பற்றி ஆரம்பிக்கப்பட்ட சமுதாய ஊழியரகங்களும், மிக வசதிபடைத்தவர்களின் கரிசனத்தை, திறமைகளை, புதுச் சிந்தனைகளை வசதியற்றவர்களின் மேம்பாட்டிற்காக பயன்படும்படி திருப்பி விட்டது.
பார்க்க: Samuel A. Barnett - பார்னெட், சாமுவேல் ஏ (1844-1913) ஆக்டேவிய ஹில்லுடன் இணைந்து முதலில் சமுதாய ஊழியரகங்கள் (Settlement House) அமைப்பைத் தோற்றுவித்தவர். டாயின் பீ ஹால் ஸ்தாபகர். சமுதாய அமைப்பாளர். வீட்டு வசதி மேம்பாட்டிற்காக உழைத்தவர். மனநோயாளிகளின் பாதுகாப்பில் அக்கறை கொண்டு செயல்பட்டவர். இங்கிலாந்தில் அறக்கட்டளை அமைப்பு வளரத் தூண்டுகோலாயிருந்தவர். ஜேன் ஆடம்ஸ் மற்றும் எலன் கேட்ஸ் ஸ்டார், ஹல் ஹவுஸ் (Hull House Settlement) செட்டில்மெண்ட் ஆரம்பிக்க முன்மாதிரியாயிருந்தவர்.
Hill, Octavia - ஹில், ஆக்டேவியா (1838–1912) சமூக சிந்தனையாளர். சமூக சீர்திருத்தவாதி. இவரால் ஆரம்பிக்கப்ட்ட ஏழ்மை தடுப்புச் சங்கம் தான், பின்னாளில் அறக் கட்டளை சங்கங்கள் Charity Organization Societies (COS) ஆரம்பிக்கப்பட முன்னுதாரமாயின. நகர்ப்புற ஏழைகள் மேம்பாட்டில் அக்கறைகொண்டு, சுகாதாரமான, கண்ணியமான குடியிருப்புகள் வறியவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று வாதாடினார்

English

The British settlement house that was established in 1884 by Samuel A. Barnett and became the prototype for the 400 American settlement houses that developed during the next 20 years. It was located in a poor section of London and served as something of a "missionary outpost", bringing the ideas, values, and social skills of affluent people to those who were less fortunate.