transactional analysis (TA)
பரிமாற்றப் பகுப்பாய்வு
தமிழ் விளக்கம்
மனிதர்கள் எல்லோரிடமும், அவர்களுடைய அனுபவங்கள் உணர்ச்சிகளோடு ஆழ்மனத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. சாதாரணமாக நிலையில் யாரும் இந்த அனுபவங்களை நினைவு கூர்வதில்லை. சில சந்தர்ப்பங்களில் நம்மை அறியாமலே ஆழ்மனம் அனிச்சைச் செயலாக இந்த நினைவுகளை வெளிப்படுத்தும். இந்தத் தன்மையை வைத்து எரிக் பெர்ன் (Eric Berne) என்னும் அமெரிக்க உளவியல் அறிஞர் பரிவர்த்தனை ஆராய்ச்சி / பரிமாற்றப் பகுப்பாய்வு (Transactional Analysis) என்ற கண்ணோட்டத்தையும், சிகிச்சை முறையையும் வடிவமைத்தார். இரண்டு அல்லது அதற்கும் அதிகமானவர்கள் சந்திக்கும் நிகழ்ச்சிக்குப் பரிவர்த்தனை என்று எரிக் பெர்ன் பெயர் வைத்தார். இந்தச் சந்திப்பில், ஒருவரின் மொழி, வார்த்தைகள் அல்லது உடல்மொழி (ஏன், கை குலுக்கல்கூட) இன்னொருவர் மனதில் பழைய நினைவுகளைத் தூண்டிவிடும் மின்சார ஷாக் போன்ற தூண்டுதல் சக்தியாகிவிடும். அந்தத் தூண்டல்கள் முன்கூட்டி தீர்மானிக்கப்பட்ட பதிவுகளின் (Life Scripts - கதை வசனத்தின்) அடிப்படையிலே நிகழ்வதாக எரிக் பெர்ன் கண்டறிந்தார். எல்லோருக்கும் வாழ்க்கைப் பதிவுகள் உண்டென்றும், அதுவே நடத்தைகளையும் விளைவுகளையும் தீர்மானிக்கிறதென்றும், அதிலிருந்து மீளவேண்டுமென்றால் வாழ்க்கைப் பதிவுகளைப் பகுத்தாராய வேண்டுமென்றும் விளக்கிய கோட்பாடுதான் பரிமாற்றப் பகுப்பாய்வு (Transactional Analysis) எனப்படுகிறது.
English
A form of group and individual psychotherapy that explores the way clients tend to interact with others; play games; perform roles as though scripted to do so; and are influenced by the three parts of the mental-cultural apparatus known as the "parent," "adult," and "child." The International Transactional Analysis Association, based in San Francisco, was founded in 1958 by Eric Berne.