transcendent character
மீறிச் செல்லும் தன்மை, கடந்த தன்மை, எல்லைதாண்டிய தன்மை
தமிழ் விளக்கம்
ஆதரவான, வளர்வதற்கு அனுசரனையான சூழல் இல்லாததிருந்தும், சட்டரீதியாக சில உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையிலும் ஒருவர் தன்னுடைய சுயகவுரவத்தை, சுய மதிப்பைக் காப்பாற்றி தன்னுடைய ஆளுமை ஒருமைப்பாட்டை பேண முடியும் திறன். இந்த சொற்பிரயோகம் லியோன் செஸ்டங்க் என்ற சமூகப்பணியாளரால் சூழல் இடர்ப்பாடுகளை மீறி எழுந்த, முன்னேறிய சில ஆப்ரிக்க அமெரிக்கரைக் (கருப்பினத்தவரை) குறிக்க அவருடைய மாறுபட்ட சமூகங்கள் என்ற புத்தகத்தில் பயன்படுத்தப்பட்டது. சூழல் நிர்பந்தங்களுக்கு இரையாகியவர்களைக் குறிக்க விலக்கப்பட்டவர்கள், மங்கலானவர்கள் என்ற வார்த்தை உபயோகிக்கப்பட்டது.
English
The ability to rise above an environment that lacks nurturing and denies legal and civil rights and still maintain one's sense of self-worth and integrity. Applied to some African Americans, the term was coined by Leon Chestang in 1976 (Environmental influences on social functioning: The black experience. In P. Cafferty & L. Chestang, Eds., The Diverse Society, pp. 59-74, Washington, DC: National Association of Social Workers). The deprecated character refers to those who encounter this environment and cannot rise above its effects.