transfer summary
சாட்டுதல் (பிறனிடம் சார்த்துதல்) அறிக்கைச் சுருக்கம், அசல்பிளந்தேறிடுதல் (பிறரிடஞ் சேர்ப்பிக்கை) அறிக்கை, தலமாற்றம் (உத்தியோகஸ்தரை ஓரிடத்திருந்து பிறிதோரிடத்திற்கு மாற்றுகை) குறிப்புகள்
தமிழ் விளக்கம்
ஒரு சமூகப்பணியாளர் வழக்கமான பொறுப்புகளிலிருந்து விடுபடும் போது, தான் அதுவரை கவனித்துவந்த வாடிக்கையாளர்களை, பிறரிடம் ஒப்படைக்கும்போது எழுதும் சாட்டுதல் அறிக்கையின் சுருக்கம். அந்தச் சுருக்கத்தில் 1. வாடிக்கையாளரின் பிரச்சனை / நோயின் போக்கு பற்றிய முன்கணிப்பு, 2. வாடிக்கையாளருக்கு உடனடியாகத் தேவைப்படும் சேவைகள் அல்லது உதவிகள், 3. வாடிக்கையாளர் எதிர்கொள்ளக்கூடியதான ஆரோக்கியப் பின்னடைவு, உணர்ச்சி மற்றும் சூழல் நெருக்கடிகள், 4. முடிக்கப்படாத சிகிச்சை மற்றும் வாடிக்கையாளரின் நிறைவேறாத எதிர்பார்ப்புகள், 5. வாடிக்கையாளருக்கு செய்துதரப்பட்ட அனைத்து உதவிகள் / சேவைகள் பற்றிய காரண காரிய விளக்கம் 6. வாடிக்கையாளரைப் பற்றிய சமூகப்பணியாளரின் ஒட்டுமொத்தப் புரிதல் மற்றும் பரிந்துரைகள் போன்ற குறிப்புகள் அந்த சாட்டுதல் அறிக்கையில் பொதுவாக இடம் பெற்றிருக்கும்.
English
The social worker's final notes made about a client and placed in the relevant case record before the case is turned over to another professional. Included in this summary are the following (not necessarily in this order): the client's prognosis; probable service needs in the near future; a description of any anticipated or possible special health, emotional, or situational crises; unfinished tasks, goals, or commitments; an overall description of the entire intervention process; and a summary of the worker's final impressions, concerns, and recommendations.