transference

உணர்வெழுச்சிப் பெயர்ச்சி, உணர்வெழுச்சி இடமாற்றீடு

தமிழ் விளக்கம்

எதனால் உருவானதென்று தீர்மானிக்க இயலாத கடந்த கால உணர்வுகளும், ஆழ்மன அனுபவங்களும் நிகழ்கால உறவுமுறைகளின் மீது செலுத்தும் நேர்மறை மற்றும் எதிர்மறையான தாக்கங்களை உளப்பகுப்பாய்வுக் கோட்பாட்டின்படி உணர்வெழுச்சிப் பெயர்ச்சி அல்லது உணர்வெழுச்சி இடமாற்றீடு எனலாம். எடுத்துக்காட்டாக, தன்னுடைய பெற்றோர் ஒருவர்மீது இனந்தெரியாத வெறுப்புடன் வளரும் குழந்தை, பெரியவராகி, சமூகப்பணியாளரிடமோ அல்லது மனநலப் பணியாளரிடமோ சேவை பெற வரும்போது, அவரின் ஆழ்மன வெறுப்புணர்ச்சி இடம் மாறும் வாய்ப்புள்ளது. உணர்வெழுச்சிகள் இடம்மாறும் போக்கை உளஇயக்கக் கோட்பாட்டை அடிப்படையாக வைத்து மனிதர்களைப் புரியமுயலும் சமூகப்பணியாளர்கள், கடந்த கால உளமுரண்பாடுகள் எப்படி நிகழ்காலப் பிரச்சனைகளாக உருமாறுகின்றன என்பதை அறிந்துகொண்டு அதற்கேற்ப சிகிச்சை முறைகளை வகுத்துக்கொள்வர். மூன்று விதமான உணர்வெழுச்சிப் பெயர்ச்சிகள் முக்கியமானது 1. counter transference என்பது சமூகப் பணியாளரோ அல்லது மனநலப் பணியாளரோ, தன் ஆழ்மன உணர்வுகளின் அடிப்படையில், சுய உணர்வுடனோ, சுய உணர்வின்றியோ தன்னுடைய மதிப்பீடுகளின்படி வாடிக்கயாளர் மீது கோபம், ஆத்திரம் கொண்டோ, சிற்றின்ப நாட்டம் கொண்டோ வாடிக்கையாளரைப் பார்ப்பது. உளஇயக்கக் கோட்பாட்டின்படி சமூகப் பணியாளரின் வளர்ச்சிப் பருவ அனுபவ முரண்பாடுகளின் அடிப்படையில் இது அமையலாம். சமூகப்பணியாளர், தனது உணர்வுகளை நுட்பமாக உணர்ந்து புரிந்து கொள்ளாவிட்டால் அவர் அளிக்கும் சிகிச்சை எதிர்பார்த்த பலனைத் தரவியலாது போகலாம் 2. Positive Transference என்பது நன்னிலை உணர்வு மாற்றீடு. இதில் ஒருவர் தான் தொடர்பு கொள்ளும் ஒருவரிடம் அன்பு, பிரேமை, அபிமானம் போன்ற நன்னிலை உணர்வுகளை வெளிப்படுத்தும் போது அவ்வுறவுகள் வலுப்படும். 3. எதிர்மறை இடமாற்றீடு (Negative Transference) என்றால் ஒரு வாடிக்கையாளர் தனக்கு சிகிச்சையளிப்பவர் மீது ஆத்திரம் கொள்ளல், அவநம்பிக்கை கொள்ளல், விரோதப்போக்கை மேற்கொள்ளல் போன்ற உணர்வுகள். உளப்பகுப்பாய்வுக் கோட்பாட்டின்படி இந்த மாதிரியான எதிர்மறை உணர்வுகள் மறைந்த நிலையிலோ அல்லது வெளிப்படையாகத் தெரியும் மாதிரியோ இருக்கலாம். இது சிகிச்சையின் பலனைக் குறைக்கும்.

English

A concept, originating in psychoanalytic theory, that refers to emotional reactions that are assigned to current rela- tionships but originated in earlier, often unresolved and unconscious experiences. For example, a client who as a child felt extremely hostile to a parent and never resolved the feeling develops extremely hostile feelings toward the social worker even though no overt reason exists for such feelings. Transference is used by psychodynamically oriented social workers and other therapists as a tool for understanding and working through past conflicts. The transfer of affectionate feelings to the worker is known as positive transference and that of hostile feelings as negative transference. See also countertransference.