transinstitutionalizing
நிறுவனங்களைக் கடந்து செல்லல்
தமிழ் விளக்கம்
ஒரு வாடிக்கையாளரை சட்டபூர்வமாகக் கையாளும் நிறுவனத்திற்குப் பதிலாக அவரை ஒன்றோ அல்லது அதற்கு மேற்பட்ட மாற்று நிறுவனங்கள் மூலமாகக் கையாளும் நடைமுறை. எடுத்துக்காட்டாக தங்களின் தகுதிக்குக் குறைவான குற்ற நடத்தைகளில் ஈடுபட்ட இளைஞர்களை, இளங் குற்றவாளிககளாகக் கருதி சீர்திருத்த நிலையங்களுக்கு அனுப்புவதை விட, அவர்கள் மனப்பிறழ்வுக்கு ஆளானவர்கள் என்று அவர்களை மனநலக் காப்பகங்களில் வைத்துக் கையாளும் நடைமுறை.
பார்க்க: deinstitutionalzation - நிறுவனங்களை அதன் வரையறுக்கப்பட்ட தன்மையிலிருந்து விடுவித்தல், அதிகாரத்துவம் மற்றும் சிக்கலான நடைமுறைகளிலிருந்து நிறுவனங்களை விடுவித்தல், நிறுவனத் தன்மையைக் கட்டவிழ்த்தல் - மன நோயாளிகளையும், பிற நோயாளிகளையும் மருத்துவ மனைகளிலிருந்தும், காப்பகங்களிலிருந்தும், வேறு சிகிச்சை நிலையங்களிலிருந்தும் விடுவித்து, மருத்துவப் பணியாளர்களின் மேற்பார்வையின் கீழ் சமுதாயத்திலே வைத்துச் சிகிச்சையும் பிற வசதிகளையும் செய்து தருவது.

English
The practice of placing clients into different institutions than the ones to which they legally belong because of the belief that the legal placement is inappropriate. For example, youths held as status offenders are placed in mental hospitals rather than jails, or juvenile offenders are placed in youth detention centers to avoid incarceration in prisons.