transitional foster home
இடைக்கால வளர்ப்பில்லங்கள்
தமிழ் விளக்கம்
வளர்ப்பில்லங்களில் வளர்க்கப்படும் சிறார்கள், வளரிளம் பருவ முடிவில், இல்லத்தை விட்டு வெளியேறுகையில், அவர்களுக்கான (16 வயதிலிருந்து 20 வயதுடையவர்களுக்கு) உலக வாழ்க்கைத் திறன்களைக் கற்றுக்கொடுக்க உதவும் இடைக்கால வளர்ப்பில்லங்கள். வளர்ப்பில்லங்களிலிருந்து வெளியேறும் சிறார்களுக்கு, முழாள்களுக்கான வாழ்க்கைத் திறன்களான, தன்சுத்தம், உடல்சுத்தம் பேணத்தெரியாமை, வேலைவாய்ப்பின்மை, போஷாக்கான உணவு எடுத்துக் கொள்ளாமை, சமுதாய வளங்களை இனங்கண்டு பயன்படுத்தத் தெரியாமை போன்றவைகளால் இடர்ப்பாடுகளுக்கு உள்ளாகும் அபாயம் உள்ளது. இந்த நிலையில் அவர்களை இடைக்கால வளர்ப்பில்லங்களில் நம்பிக்கைக்குரிய அறிவுரையாளராக, ஆசிரியராக, வழிகாட்டியாகச் செயல்படும் வளர்ப்புப் பெற்றோரின் கண்காணிப்பில் விடும்போது, அவர்கள் வாழ்க்கையை எதிர்கொள்ளத் தேவையான திறன்கள் கைவரப் பெறுவர்.
English
A program to help older adolescents (usually ages 16 to 20) learn independent living skills prior to graduating from the foster care system. The program is primarily for young people at risk of leaving their foster placements before developing essential adult living skills such as financial management, the ability to access community resources, proper nutrition and hygiene, and employment skills. They are placed in special homes in which the foster parent assumes the role of a mentor, resource person, teacher, and monitor rather than the parent.