transsexualism
பாலுறுப்பு சிகிச்சை மூலம் மாற்றுப்பாலராதல், மாற்றுப்பாலினராதல்
தமிழ் விளக்கம்
1. அறுவைச் சிகிச்சை மூலமோ, ஊசிமூலம் இயக்குநீர் (harmone) உள்ளேற்றியோ, உளச் சிகிச்சை மூலமோ அல்லது பிரத்யேகப் பயிற்சிகள் மூலமோ ஒருவரின் பாலின அடையாளத்தை மாற்றிக்கொள்ளுதல். 2. பாலின அடையாளச் சீர்கேடு - gender dysphoria பாலின அடையாளம் பற்றிய மகிழ்ச்சியற்ற, திருப்தியற்ற மனநிலை. பிறப்பின் வழியான ஆண் மற்றும் பெண் அடையாளத்தை ஏற்காமல், ஒரு ஆண் தன்னைப் பெண்ணாகவும் (உ.ம். ஆண் தன்னை திருநங்கையாக உணர்தல்) பெண் தன்னை ஆணாகவும் அடையாளப்படுத்திக் கொள்ளும் கோளாறு. பெற்றோர், ஆசிரியர், நண்பர்களின் கண்டிப்பையும், கேலியையும் மீறி, சிறுவயதில் உடைமாறி அணியும் கோளாறாக வடிவெடுத்து, வளர வளர மாற்றுப் பாலினத்தவர் போன்றே நடந்துகொண்டு, முற்றிய நிலையில் பாலுறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சையில் சென்று முடியும் நிலை.
பார்க்க: gender identity - பாலின அடையாளம் (பெறுதல்) - பாலின அடையாளம் என்பது ஒரு அக உணர்வு. ஒருவர் தன்னை ஆணாகவோ, பெண்ணாகவோ உணரும் தன்மை. மற்றவர்களாலும் அவர் ஆண் பெண் என்று அறியப்படும் தன்மை.
.
பார்க்க: gender identity - பாலின அடையாளம் (பெறுதல்) - பாலின அடையாளம் என்பது ஒரு அக உணர்வு. ஒருவர் தன்னை ஆணாகவோ, பெண்ணாகவோ உணரும் தன்மை. மற்றவர்களாலும் அவர் ஆண் பெண் என்று அறியப்படும் தன்மை.
.
English
1. The changing of one's sex through surgery, hormone injections, psychotherapy, and special training. 2. A gender identity disorder in which an individual has a strong and persistent desire to be a member of the opposite sex.