trauma
உணர்வதிர்சசிக் கோளாறு, புற அதிர்ச்சிப்புண், அடிவேதனைப் படுகாயம். .ஊறுபாடு, காயப்படுதல், புண்பட்ட அதிர்ச்சி, உளவூறு, உடலூறு
தமிழ் விளக்கம்
அதிர்ச்சியினாலோ, வன்முறையாலோ அல்லது எதிர்பாராது ஏற்பட்ட சம்பவத்தாலோ / விபத்தாலோ, உடல்ரீதியாகவோ மன ரீதியாகவோ ஏற்படும் வேதனை / அதிர்ச்சி அல்லது உடலூறு / உளவூறு. உணர்ச்சி மறத்தல், எல்லாவற்றிலிருந்தும் பின்வாங்குதல் (கைவாங்குதல்; பின்வாங்குதல், வாபஸ்), கவலை, பயம், பதட்டமடைதல், உதவியற்று உணர்தல் (கையறு நிலை) போன்றவை உளவூறினால் ஏற்படும் அறிகுறிகள்.
பார்க்க: posttraumatic stress disorder (PTSD - அதிர்ச்சிக்குப் பின்னான மனஅழுத்தச் சீர்கேடு, ஊறுபாட்டை அடுத்த உளவழுத்தக் கோளாறு - வழக்கமான மனித அனுபவங்களைக் கடந்து, அசாதாரண நிகழ்வுகளால் ஏற்படும் உளவியல் தாக்கம். விபத்து, இயற்கைப் பேரிடர்கள், இராணுவத் தாக்குதல், கற்பழிப்பு, தாக்குதலுக்குள்ளாதல் போன்ற நிகழ்ச்சிகளை மன அழுத்ததைத் தரும் அசாதாரணமான நிகழ்வுகள் எனலாம். இயல்பாக மனிதர்களுக்கு மன அழுத்ததைத் தரும் தாம்பத்தியப் பிரச்சனைகள், மரணம், நோய் போன்றவை அதிர்ச்சியான சம்பவங்களாகக் கருதப்படுவதில்லை. அதிர்ச்சிக்குறிய சம்பவங்களை எதிர்கொண்டவர்களால் எதிலும் கவனம் செலுத்த முடியாமை, உணர்வு மழுங்கல், சுரணை இழத்தல், அதீத எச்சரிக்கை உணர்வு, மிரட்சி, துயர் தரும் நினைவுகள், தூக்கத் தொந்தரவுகள், பயங்கரக் கனவுகள் போன்றவை அதிர்ச்சிக்குப் பின்னான விளைவுகளாகும்.

English
An injury to the body or psyche by some type of shock, violence, or unanticipated situation. Symptoms of psychological trauma include numbness of feeling, withdrawal, helplessness, depression, anxiety, and fear. See also posttraumatic stress disorder (PTSD).