traumatic event debriefing (TED)
traumatic event debriefing (TED)
தமிழ் விளக்கம்
உணர்வதிர்ச்சிக் கோளாறால் பாதிக்கப்பட்டவரிடம் விவரம் அறிதல், உளவூறு / உடலூறால் பாதிக்கப்பட்டவர்களிடம் விவரம் அறிதல் - சமீபத்தில் அதிர்ச்சிக்கு ஆளானவர்களை (24 மணி நேரத்திலிருந்து 74 மணி நேரத்திற்குள்) குழுவாகக் கூட்டி, நடந்து முடிந்த சம்பவத்தைப் பற்றி நிபுணர்களோடு கலந்துரையாடி பரஸ்பரம் விளக்கம் பரிமாறிக்கொள்ளும் போது, அதிர்ச்சிக்கு ஆளானவர்கள் அடங்கிக் கிடந்த தங்களின் எண்ணங்களை வெளிப்படுத்துவதன் மூலம் மனப் பாரத்தை இறக்கி வைத்து மன அழுத்தம் குறைத்துக் கொள்வார். இந்தப் பரிமாற்றம், அதிர்ச்சியைப் பற்றிய உணர்வு பூர்வ நிலையிலிருந்து, அறிவார்ந்த விளக்கம் பெற்று, பின் பகுத்தறிவுக்கு ஏற்ப அந்த சம்பவத்தை ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு மாறுவர். இந்தச் சமாதானம் எழுநிலைகளைக் கொண்டது 1. அதிர்ச்சிக்குள்ளானவர்களும், நிபுணர்களும் சந்தித்து அறிமுகப்படுத்திக் கொள்ளல் 2. சம்பவத்தைப் பற்றி செய்திகளைப் பரிமாறிக்கொள்ளல் 3. சம்பவம் நடக்கும் போது அவர்களின் மனநிலையை எடுத்துக்கூறுதல், 4. சம்பவத்தின் மோசமான பகுதியை நினைவு கூறல், 5. அதனுடைய அறிகுறிகளைப் பற்றிக் கலந்துரையாடுதல், 6. அதைப்பற்றி முறையாக விளக்கமளித்தல், 7. தங்களுடைய முடிவான கருத்துகளைக் கூறி சமூகமயமாக முயற்சி செய்தல். இந்த முறை, போர், இயற்கைப் பேரிடர், விபத்துக்கள், பணியிட அதிர்ச்சிகள் / விபத்துக்கள், வன்முறை கலவரங்களுக்குள்ளாதல், கொள்ளையடிக்கப்படுதல் போன்ற அதிர்ச்சியான சம்பவங்களின் தாக்கத்திலிருந்து விடுபட உதவியாய் இருப்பதாக சமூகப்பணிக் கல்வியாளர் ஜேனேட் எல். பெல் என்பவர் தெரிவிக்கின்றார்.
பார்க்க: multiple-stressor debriefing (MSD) - பன்முக நெருக்கடிக்கு உள்ளானவர்களிடம் விபரம் அறிதல் - நெருக்கடிகால நிவாரணப்பணிகளில் ஈடுபட்டுள்ளோருக்கு பலவிதமான நெருக்கடிகளும், மனஅழுத்தங்களும் உண்டாகும். அந்த நெருக்கடிகளைப் பகிர்ந்து கொள்ள வாய்ப்பு ஏற்படும் போது, ஒரு நெருக்கடியைச் சமாளிக்க அவர்கள் என்னென்ன முயற்சிகள் மேற்கொண்டார்கள், அதில் எது பயனுடையாய் இருந்தது, எது பயனற்றதாய் இருந்தது அவர்கள் எதிர்கொண்ட சவால்களை எப்படிக் கையாண்டார்கள் போன்ற விவரங்களை ஒரு குழுச் சூழலில் பகிர்ந்துகொள்ளும் போது அவர்கள் அடுத்துவரும் நெருக்கடிகளைத் திறனுடன் சமாளிப்பதற்கான ஆற்றல் பெறுகிறார்கள். இது அபாய நெருக்கடிக்கு உள்ளானவர்களிடம் (critical incident stress debriefing (CISD) விவரம் அறியும் முறை போன்றதென்றாலும், அது ஒரே அமர்வில் முடியும் குறுகிய கால அணுகுமுறை. இது அதிர்ச்சிக்கு உள்ளானவர்களிடம் (traumatic event debriefing (TED) விவரம் அறியும் முறை போன்றதென்றாலும் அது ஒரு சம்பவத்தைக் குறித்து மட்டும் செய்யும் அணுகுமுறையாகும்.

English
An advanced level of crisis intervention in which groups of people who have recently (within 24 to 72 hours) experienced a catastrophic event are brought together with professional debriefers to share their perspectives and to relieve stress cathartically. The process moves them from a cognitive level to an emotional level and back again to a cognitive level. The seven phases of the process are (1) making introductions and rules, (2) establishing the facts, (3) describing initial thoughts at the time of event, (4) individually identifying the worst part of the event, (5) discussing symptoms, (6) providing education, and (7) concluding thoughts and socializing. According to Janet L. Bell (Traumatic Event Debriefing, Social Work, 40[1995], 36-43), this intervention process is used effectively with survivors of war, natural and accidental disasters, workplace trauma, fires, assaults, and robberies. See also multiple-stressor debriefing (MSD) and critical-incident stress debriefing (CISD).