triage
முதலுதவியில் வகைப்படுத்தல் / வரிசையாக்கல்
தமிழ் விளக்கம்
இயற்கைப் பேரிடராலோ அல்லது பிற எதிர்பாராத சம்பவங்களாலோ பாதிக்கப்பட்டவர்களுக்கு, முன்னுரிமை அடிப்படையில் உதவியோ முதலுதவியோ செய்யும் நடைமுறை. எடுத்துக்காட்டாக நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டு காயமுற்றவர்களை, காயத்தின் தீவிரத் தன்மையைப் பொறுத்து மருத்துவ அணியின் முன் கொண்டுசெல்வது. இங்கே முதலில் வந்தவருக்கு முன்னுரிமை என்றில்லாமல், அவசர உதவி தேவைப்படுவோருக்கு முதலில் உதவுவது. இது போர்க்களத்தில் பின்பற்றப்படும் நடைமுறையிலிருந்து உருவானது. அங்கே உடலூறு உற்றவர் / ஊறடைந்தோரை மூன்று விதமாக வகைப்படுத்தி முதலுதவி செய்வார். 1. எப்படிச் சிகிச்சை அளித்தாலும் உயிர் பிழைக்க மாட்டார்கள் என்ற வகையினர். 2. சிகிச்சை தாமதமாக அளித்தாலும் பிழைத்துக் கொள்வர் எனற வகையினர். 3. உடனடி சிகிச்சை அளிக்காவிட்டால் பிழைப்பது அரிது என்ற வகையினர். இவர்களில் மூன்றாம் வகையினருக்கே முன்னுரிமை அடிப்படையில் முதலுதவியும் பிற உதவிகளும் உடனடியாகச் செய்யப்படும்.
English
A crisis intervention technique for prioritizing the help that will be available to disaster victims. For example, physically injured earthquake victims may be organized or placed in such a way that medical personnel can first provide help to those in the most critical condition rather than on a first-come, first-served basis. The term originated as a military battlefield procedure of dividing casualties into three categoriesthose who will die regardless of help, those who will live whether they get help or not, and those who will live only if they receive immediate care. Help is given to this last group first.