trial balloon
கருத்தறியும் முயற்சி, நோட்டம் பார்த்தல், ஒரு கருத்தை வெள்ளோட்டம் விட்டுப் பார்த்தல், விசாரணை பலூன்
தமிழ் விளக்கம்
ஒரு அரசியல்வாதியோ அல்லது சமூகச் செயல்பாட்டாளரோ, தன்னுடைய கருத்தை இரகசியமாகவோ அல்லது பிறர் மூலமாகவோ கசியவிட்டு, பொதுமக்களின் கருத்தறிய முயல்வது. அந்தக் கருத்திற்கு ஆதரவு கிடைக்கும் பட்சம், அதற்கு உரிமை கொண்டாடுவது, அந்தக் கருத்து பொதுமக்களால் எதிர்க்கப்பட்டால் தன்னுடைய அடையாளத்தை மறைத்துக் கொண்டு பின்வாங்குவது.
English
A politician's or activist's declaration, issued in some covert fashion, to determine whether the public might be supportive. If the public disapproves of the declaration, the person can deny having made it, thus avoiding the appearance of indecisiveness or backing an unpopular cause.