triangulation
முக்கோணப் பரிசோதனை, மும்முனை அளவிடல், மூன்றாம் நபர் மூலமாகத் தொடர்பு கொள்ளல், வலது இடது சாராத அரசியல் நிலை
தமிழ் விளக்கம்
1. கணிதத்தில் முக்கோணம் என்பது மூன்று கோணங்களையும், மூன்று உச்சிகளையும், நேர்கோடுகளாலான மூன்று பக்கங்களையும் கொண்ட, ஒரு தட்டையான இரு பரிமாண உருவமாகும். 2. சமூக அறிவியலில், குறிப்பாக ஆய்வு முறைகளில், பல்வேறு முறைகளின் மூலமும், நபர்கள் மூலமும், பல்வேறு இடங்களிலிருந்து, பல்வேறு காலகட்டங்களில் சேகரிக்கப்பட்ட தரவுகளை ஒப்பீடு செய்து அதன் உள்ளார்ந்த தன்மையைச் சோதித்தறிவது. 3. மன உளைச்சலுக்கு உட்பட்டு, பல்வேறு நெருக்கடிகளுக்கு ஆளாகி, கையாலாகா மனநிலைக்கு ஆட்பட்ட ஒருவர், தனக்கு உதவியாக, தன் சார்பாகப் பேச மூன்றாம் நபரைக் கொண்டுவருவது அல்லது சார்ந்திருப்பது. எடுத்துக்காட்டாக, தனக்குக் கட்டுப்படாத தன் குழந்தைகளை நெறிப்படுத்த, ஒரு தாய், கணவரின் அல்லது குடும்பத்திலுள்ள பிறரின் உதவியை நாடுவது. 4. அரசியலில் வலது, இடது போன்ற கோட்பாடுகளைக் கடந்த மாற்று நிலை கொண்டவர்கள்.
English
The process in which one individual who feels pressured, distressed, or powerless in relating to another individual brings into the relationship a third person to act as an ally or a distracter. For example, a mother who feels she has too little control over her children brings the father or a grandparent onto the scene. Or, a social worker will sometimes find that an individual client will bring in a spouse or call attention to another family member who is present whenever there is pressure or confrontation.