trichotillomania

தலைவிரிக்கோலப் பித்து, தலை முடியைப் பிய்த்துக் கொள்ள இயற்கை மீறிய ஆவல்

தமிழ் விளக்கம்

பல வகையான உளக்கிளர்ச்சி, உன்மத்தம், மட்டுமீறிய ஆவல், கோட்டித்தனங்களுள் ஒன்று. பலவகையான உளக்கிளர்ச்சிப் பிணிகளாவன - agromania (வயல்வெளியில் நடக்கப் பேரார்வம்), agoraphobia (திறந்த வெளியைக் கண்டு பயப்படுதல், திறந்த வெளி கண்டு இயற்கை மீறிய பேரச்சம், பழக்கமில்லா இடங்களைப்பற்றிய பீதி, திடல் மருட்சி), alcoholism, dipsomania, potomania (மது வெறி), egomania (அக மையவெறி, தன் மையவெறி, ஒருவர் தன்னுடைய விருப்பங்களையும், நலன்களையும் முன்னிறுத்திச் சிந்திப்பது), kleptomania (திருட்டார்வம், அணிச்சைத் திருட்டு, அடுத்தவர் பொருளைச் சட்டத்திற்குப் புறம்பான வழியில், திருடும் ஒரு உளத்தூண்டல் கோளாறு), logomania, logorrhea (பேச்சொலி மிகைப்பு, வேகப் பேச்சு, சொல் வேக மிகைப்பு), monomania (ஒரு பொருள் வெறி ஒரு கருத்துவெறி), necromania, necrophilia, necrophilism (அழிதல் பைத்தியம், மரித்தல் வெறி அல்லது இறந்த உடல்களின் மீது ஏற்படும் தடுக்கமுடியாத ஒரு இனக்கவர்ச்சி), phaneromania (நகம் கடிக்கும் பேராவல்), pyromania (தீ வைக்கும் வெறி தீக்கொளுவு வெறி), trichotillomania (முடியைப் பிய்த்துக்கொள்ளும் வெறி).

English

An impulse control disorder involving the obsessive pulling of one's hair, often seen in anxious toddlers and children and sometimes in adults with anxiety, masochistic tendencies, or another mental disorder. The pattern results in noticeable hair loss in those sites where it occurs (mostly the scalp, eyebrows, and eyelashes).