trust versus mistrust

(உள சமூக அபிவிருத்தி கோட்பாட்டில் சொல்லப்படும்) நம்பிக்கையும் அவநம்பிக்கையும்

தமிழ் விளக்கம்

மனித வளர்ச்சி நிலைகளைப் பல்வேறு உளவியலாளரும் பல கோணங்களில் ஆராய்ந்து கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். அறிவு வளர்ச்சியைக் கருத்திற்கொண்டு பியாஜேயும், உளப்பகுப்பு நிலையினை அடிப்டையாகக் கொண்டு சிக்மண்ட் பிராய்டும், ஒழுக்க நிலையினைக் கருத்திற் கொண்டு கோல்பேர்க்கும், உள-சமூகவிருத்தி நிலையினைக் கொண்டு எரிக்சனும் விளக்கியுள்ளனர். மனிதன் வாழ்நாள் முழுவதும் இந்த உலகத்துடன் இணைந்து செயலாற்றுவதால் ஏற்படும் வளர்ச்சியை எரிக்சன் எட்டு படிநிலைகளில் விளக்குகிறார். அவர் வகுத்த எட்டு வாழ்க்கை நிலைகள் 1. நம்பிக்கையும் அவநம்பிக்கையும் - trust versus mistrust (1-2 வயது), 2. தன்னியக்கமும் (சுதந்திரமாக இயங்குதல்), தயக்கமும், நானக்கேடும் - autonomy versus shame and doubt (2-4 வயது), 3. முன்முயற்சியும் குற்ற உணர்வும் - initiative versus guilt (4-6 வயது) 4. விடாமுயற்சியும் தாழ்மை உணர்வும் - industry versus inferiority (6-12 வயது), 5. . குமரப் பருவம் - அதுவேயாந்தன்மை (தனித்துவமும் - தன்னைப் பற்றிய நிலையான கருத்து), கடமைக்கூற்று முரண்பாடு - identity versus role confusion (12- 18 வயது), 6. முன் முதிர்பருவம் - நெருக்கமும், தனிமையும் - intimacy versus isolation (18- 24 வயது), 7. நடுமுதிர் பருவம் - பெருக்கப் பண்பும், தேங்கி நிற்றலும் - generativity versus stagnation (24 - 54 வயது), 8. பின் முதிர் பருவம் - இணக்கமும் விரக்தியும் (இணக்கமின்மையும்) - integrity versus despair (54 வயதிற்கு மேல் மரிக்கும் வரை).
நம்பிக்கையும் அவநம்பிக்கையும் - trust versus mistrust எரிக்சானின் உள சமூக அபிவிருத்திக் கோட்பாட்டின் முதல்நிலை.

English

The basic conflict found in the first stage of human development, according to the psychosocial development theory of Erik Erikson (1902-1994), occurring from birth to about age two. The infant may develop feelings of security and confidence in those who provide care or, possibly, because of inconsistent nurturing, may come to doubt that others are reliable.