Tuckerman, Joseph (1778-1840)

டக்கெர்மேன் ஜோசப் (1778 - 1840)

தமிழ் விளக்கம்

டக்கெர்மேன் ஜோசப் (1778 - 1840) - கிறிஸ்துவ மதத்தில் திரித்துவத்தை (trinity) பின்பற்றாத, தனியொருமைக்கோட்பாடு திருச்சபையின் மதபோதகரான இவர், சால்மர்ஸ், தாமஸ் (1780–1847) என்ற ஸ்காட்டிஷ் சமயவியலாளர் மற்றும் அறக் கோட்பாட்டியல் பேராசிரியரின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு, ஏழைக் குடும்பங்களுடன் பணியாற்ற தன்னார்வத் தொண்டர்களை உருவாக்கி, பயிற்சி தந்து, அதற்குத் தேவையான நிதி திரட்டி, சமூகச் செயல்பாட்டில் ஈடுபட, ஏழ்மைத் தடுப்பிற்கான பாஸ்டன் அறக்கட்டளையை 1835 ஆம் ஆண்டு தோற்றுவித்தார். பாஸ்டன் அறக்கட்டளை செயல்முறைகளே / நடைமுறைகளே பின்னாளில் அறக்கட்டளைச் சங்கங்கள் உருவாக வழிவகுத்தது. அறக்கட்டளைச் சங்கங்களே சமூகப்பணி உருவாக காரணமாய் அமைந்தது என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
பார்க்க: Thomas Chalmers - சால்மர்ஸ், தாமஸ் (1780–1847) ஸ்காட்டிஷ் சமயவியலாளர் மற்றும் அறக் கோட்பாட்டியல் பேராசிரியர். தன்னார்வத் தொண்டர்களை உருவாக்கி, அவர்கள் மூலம் வசதியற்ற மக்களுக்குப் பொருளுதவியும், தொழில் பயிற்சியும் தருவதற்கு ஊக்கமளித்தார். விரிவாக எழுதப்பட்ட அவருடைய அனுபவங்களே பின்னாளில் ஏழ்மை ஒழிப்பில் எப்படிப் பணியாற்றவேண்டும் என்பதற்கான வழிகாட்டியாய் அமைந்தது.

English

A Unitarian minister who was influenced by the work of Thomas Chalmers in Scotland and organized the Boston Society for the Prevention of Pauperism in 1835, using many of Chalmers's principles of individualized work with poor families, volunteer visitors, coordinated fundraising, and social action. His work influenced the subsequent development of the Charity Organization Societies (COSs).