Tufts Report
டப்டஸ் அறிக்கை
தமிழ் விளக்கம்
சமூகப்பணிக் கல்வி கற்பிக்க வேண்டிய முறைகளைப் பற்றியும், சமூகப்பணிக் களிவியில் சமூகப் பிரக்ஞையையும், உலகளாவிய கண்ணோட்டத்தை வளர்ப்பதன் முக்கியத்துவம் பற்றியும் எடுத்துக்கூறிய ஜேம்ஸ் எச் டப்டஸ் என்பவரால் தயாரிக்கப்பட்டு 1923 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிக்கை.
பார்க்க; Social Work Curriculum Study - சமூகப்பணி பாடத்திட்ட ஆய்வு - சமூகப்பணிக் கல்வியில் என்னென்னவெல்லாம் போதிக்கப்பட வேண்டுமென்று யோசனை சொல்வதற்காக சமூகப் பணிக்கல்விக்கான குழு (Council on Social Work Education) வெர்னர் போம் தலைமையில் 1959 ஆம் ஆண்டு நியமித்த குழு. இந்தக்குழுவின் அறிக்கை சமூகப்பணிக் கல்வியில் ஒரு மைல்கள் என்றே கருதப்படுகிறது. 13 பாகங்களைக் கொண்ட இந்த அறிக்கையின் மூலமாக சமூகப்பணிக் கல்லூரிகளுக்கு அங்கீகாரமளிக்கும் வரையறைகளையும், சமூகப்பணி கல்லூரிகளில் எந்த மாதிரியான போதனா முறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்பதை, சமூகப்பணி கல்விக்குழு வரையறை செய்தது.
Hollis-Taylor Report - ஹோலிஸ்-டெய்லர் அறிக்கை - சமூகப்பணிக் கல்வியின் நிலையையும் எதிர்காலத்தில் அது செல்லவேண்டிய திசைகளையும் ஆராய்ந்து, 1951 ஆம் ஆண்டு எர்ணஸ்ட் ஹோலிஸ் மற்றும் அலிஸ் டைலர் கொடுத்த முக்கியமான ஆய்வறிக்கை. இந்த அறிக்கை சமூகப்பணிக் கல்வி நிபுணத்துவம் கொண்ட பல்வேறு பாடப் பிரிவுகளாக விரிந்து, எந்தப் பிரச்சனைக்கும் தனித்தனியாக தீர்வு காண நினைக்கும் போக்கை கேள்விக்குறியாக்கி இருந்தது. இதற்கு மாறாக சமூகப்பணிக் கல்வியில் முழுமை நோக்கு கண்ணோட்டம் வலியுறுத்தப்பட்டு, பொதுவான சமூகப் பிரச்சனைகளில் அக்கறைகொண்ட, சமூகச் செயல்பாட்டை முன்னிலைப்படுத்த வலியுறுத்தியது. அவர்களின் அறிக்கை சமூகப்பணிக் கல்வியாளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, இப்போதிருக்கின்ற சமூகப்பணிக் கல்வியின் நோக்கங்களைத் தீர்மானிக்க உதவியது.

English
A 1923 study on social work education by James H. Tufts formally delineating the components necessary to provide adequate education for social workers. The report was influential in developing the social work education system toward social cause and macro perspectives. See also social work education, Hollis-Taylor Report, and Social Work Curriculum Study.