Type B personality
B வகை ஆளுமை
தமிழ் விளக்கம்
ஆளுமை பற்றியும் அது உருவாகும் விதம் குறித்தும் பலவகையான உளவியல் கோட்பாடுகள் உள்ளன. 1. ஆளுமையை வகைப்படுத்தும் கோட்பாடுகள் ஆளுமையை A மற்றும் B வகைகளாகக் குறிக்கும் கோட்பாடுகள் போன்றது. இவை ஆளுமை குறித்த தொடக்ககாலக் கோட்பாடுகளாகும். இக் கோட்பாடுகள் ஒரு குறிக்கப்பட்ட எண்ணிக்கையான ஆளுமை வகைகளே உள்ளதாகக் கூறின. 2. இயல்புக் கோட்பாடுகள் - இக் கோட்பாடுகள் ஆளுமையென்பது மரபியல் அடிப்படையிலான உள்ளார்ந்த இயல்புகளின் வெளிப்பாடு என்றன. 3. உள இயக்கவியல் கோட்பாடுகள் - இவை ஆளுமை மீது நனவிலித் தன்மையின் செல்வாக்குக்கு அதிக அழுத்தம் கொடுத்தன. இக் கோட்பாடுகளில் பெரும்பாலும் சிக்மண்ட் பிராய்ட் செய்த ஆய்வுகளின் வெளிப்பாடாக அமைந்தது. 4. நடத்தைக் கோட்பாடுகள் - தனியாளுக்கும், சூழலுக்கும் இடையிலான இடைவினைகளின் விளைவே ஆளுமை என நடத்தைக் கோட்பாடுகள் கருதுகின்றன. இக் கோட்பாடுகள் அளக்கக்கூடியவையும் கவனிக்கத் தக்கவையுமான நடத்தைகளை மட்டுமே கருத்துக்கு எடுக்கின்றன. எண்ணங்கள், உணர்வுகள் போன்ற உளம் சார்ந்த விடயங்களை இவை கவனத்திற் கொள்வதில்லை. 5. மனிதநலக் கோட்பாடுகள் - இக் கோட்பாடுகள், ஆளுமையின் உருவாக்கத்தில் கட்டற்ற தன்விருப்பு, தனிமனிதப் பட்டறிவு என்பவற்றுக்கு அழுத்தம் கொடுக்கின்றன. இதில் A வகை ஆளுமையுள்ளவர்கள் பொறுமையின்மை, போட்டி மனோபாவம், நேரம் பற்றியும், நேரம் தவறாமை பற்றியும் இயல்பு மீறிய விசாரம் போன்ற பண்புநலன்களைப் பெற்றிருப்பர். இவர்கள் பதட்ட மனோபாவத்துடன் செயல்படுபவர்களாகையால் இவர்களுக்கு இதய நோய்களும், எந்தவிதமான வெளிப்படையான காரணங்களின்றி மன அழுத்தத்தின் விளைவாக ஏற்படும் உடல் ரீதியாக வரும் உபாதைகள், வலிப்பு, மயக்கம், உளப்பிரச்சனைகள் உடல் உபாதைகளாக மாறும் தன்மை போன்ற அறிகுறிகள் இந்த ஆளுமையுடைவர்களிடம் தென்படும் எனக் கூறப்பட்டாலும், அதை அறிவியல் பூர்வமாக நிரூபிக்கவில்லை. B வகை ஆளுமை உள்ளவர்கள், பொறுமையாகவும், போட்டி மனப்பான்மையற்றும், ஓரளவு விசாரமற்ற மனோபாவத்துடன் இருப்பர். இவர்களுக்கு மன அழுத்தத்தின் விளைவாக ஏற்படும் உடல் ரீதியாக வரும் உபாதைகள் தொந்தரவு இருக்காதென்றாலும், எதிலும் ஆர்வமற்று, சாதிக்கும் மன்ப்பான்மையற்று இருப்பர்.
English
A pattern of thinking and behaving characterized by patience, noncompetitiveness, and a relaxed attitude about time. People who have Type B personalities are said to be at low risk for heart disease and other disorders, although most research does not substantiate this assertion. See also Type A personality.