typhus

நச்சுக் காய்ச்சல், சன்னிக் காய்ச்சல், சொறி நச்சுக்காய்ச்சல், உடலில் சிவந்த புள்ளிகள் தோன்றும் நச்சுக் காய்ச்சல், உண்ணிக் காய்ச்சல், ரிக்கட்சியால் காய்ச்சல், கிருஷ்ணதோஷம், சன்னிபாதசுரம்

தமிழ் விளக்கம்

உண்ணிக் காய்ச்சல் கண்டவருக்கு கடுமையான காய்ச்சல் ஏற்படும். தலையிடி, உடல்நோவு, கண்கள் சிவப்படைதல் என்பவையும் ஏற்படும். இந்த அறிகுறிகள் சாதாரண வைரஸ்காய்ச்சல், டெங்குக்காய்ச்சல், வெப்டோஸ் எனப்படும் எலிக்காய்ச்சல் போன்ற நோய்களிலும் ஏற்படுமென்பதால் வேறுபடுத்தி அறிவது கடினம். ஆனால் உண்ணிக் காய்ச்சலைக் கண்டுபிடிக்க ஒரு வழியுண்டு அதுதான் Eschar எனப்படும் ஒரு கிரய வட்டம், அதைச்சுற்றி ஒரு வெள்ளை வட்டம். அதைச்சுற்றி ஒரு சிவப்பு வட்டம். அழகான டிசைன் போல ஸ்டிக்கர் ஓட்டியதுபோல அடையாளம் காணப்படும். இது உண்ணி / தெள்ளு / பூச்சி கடித்த இடத்தில் ஏற்படும். இது சிகரட் சுட்ட புண்ணைப்போன்ற அமைப்புடையது. இது கம்புக்கூடு போன்ற மறைவான ஈரளிப்பான இடங்களில் காணப்படும். இது நோவையோ சொறிச்சலையோ ஏற்படுத்துவதில்லை. எனவே நோயாளி இது பற்றிப் பெரிதுபடுத்துவதோ அவதானிப்பதோ இல்லை. தற்செயலாக இதை அவதானித்தால் மருத்துவரிடம் செல்லவேண்டும். ஆனால் உண்ணிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களில் 60 வீதமானவர்களுக்கே இந்த அடையாளம் ஏற்படுகின்றது. உண்ணிக் காய்ச்சலை கண்டுபிடித்து உரிய சிகிச்சையளிக்காமல் விட்டால் மோசமான விளைவுகள் ஏற்படலாம், மூளை அழற்சி, நிமோனியா, இருதயப் பாதிப்பு, மற்றும் குருதியமுக்கம் குறைவடைதல் போன்ற பல பிரச்சினைகள் ஏற்பட்டு இறுதியில் இறப்பு ஏற்படலாம்.
உலகத்தையே, வென்று, தன்னை, மகா அலெக்ஸாண்டர் என்று பட்டம் சூட்டிக்கொண்டவன், ஊர் திரும்பும் வேளையில், பாபிலோனியாவில், டைபஸ் காய்ச்சலில் மாண்டுபோனான். ருஷ்யா, டைபஸ் காய்ச்சலில், அதிகம் பாதிக்கப்பட்ட நாடு. புரட்சிக்குப்பின் அதிகாரத்தையும், நிர்வாகத்தையும் லெனின் கையில் எடுத்துக்கொண்டபோது, பொறுப்போடு, கம்யூனிஸம், டைபஸ் காய்ச்சலை ஒழிக்கவேண்டும்; இல்லையேல், டைபஸ், கம்யூனிஸத்தைக் கொன்றுவிடும் என்று டைபஸ் காய்ச்சலுக்கு முக்கியத்துவம் அளித்து அதை கட்டுக்குள் கொண்டுவந்தார்.

English

An acute infectious disease with symptoms of high fever, dark red spots on the skin, delirium, and extreme weakness. The disease is transmitted by fleas, ticks, mites, and lice.