typology of casework treatment
சமூகத் தனியாளர் பணி சிகிச்சை வகைப்பாடுகள்
தமிழ் விளக்கம்
வாடிக்கையாளர்களுடன் பணியாற்றும் போது, பிரச்சனை தீர சமூகப்பணியாளர்கள் கையாளும் உத்திகளை, பிளாரன்ஸ் ஹோலிஸ் மற்றும் மேரி வுட்ஸ் என்ற சமூகப்பணியாளர்கள் வகைப்படுத்தித் தொகுத்த விவரம். இந்த வகைப்பாடு, (a)சமூகப்பணியாளர்கள் கையாளும் உத்திகளின் தாக்கம் / விளைவுகள் பொறுத்தும், (b) வாடிக்கையாளர்கள் தங்களின் அடக்கி வைத்த உணர்ச்சிகளை வெளியிட கிடைக்கும் வாய்ப்புகளை வைத்தும், (c) வாடிக்கையாளர் தன்னுடைய சூழ்நிலையை, பிரச்சனையின் போக்கை ஆழ்ந்து சிந்திக்க ஏற்படுத்திக் கொடுக்கும் வாய்ப்புகளை வைத்தும், (d) பிரச்சனையின் வரலாற்றுப் போக்கை புரிந்து கொள்ள உருவாக்கும் வாய்ப்புகளை வைத்தும், (e) பின்பற்றும் நடைமுறைகளின் ஸ்திரத்தன்மையை வைத்தும் வகைப்பாடு செய்யப்பட்டது
English
The classification of techniques used by social workers in direct work with individual clients, formulated by Florence Hollis in the 1960s and later with Mary E. Woods (Casework: A Psycho-social Therapy, 4th ed., New York: McGraw-Hill, 1989, pp. 114-123). The techniques consist of sustaining procedures, direct influence, ventilation, reflective consideration of the person situation configuration, reflection about the dynamics of patterns or tendencies, and thinking about the historical development of those patterns. The typology permits examination of environmental as well as internal influences.