tzedakah

தானம், தர்மம், அறம்

தமிழ் விளக்கம்

யூத மதத்தில் அடுத்தவர்களுக்கு, இயலாதவர்களுக்கு வழங்கும் உதவிகளைப் பற்றியும், உதவி செய்யும் பண்பைப் பற்றியும் குறிக்கும் சொல்லாடல். ஏழைகள் தன்னுதவிக்கு வழங்கப்படும் அனைத்துவிதமான உதவிகளையும் இச்சொல் குறிக்கும்.
பார்க்க: kupah - குபா - யூத பாரம்பரியத்தில், ஒவ்வொரு யூதரும் அவர்கள் வாழும் சமுதாயத்தில், சமூக நியாயங்களை (social justice obligation) நடைமுறைப்படுத்த உருவாக்கப்படும் சமுதாயப் பொதுநிதிக்கு பங்களிக்கும் முறை. இதோடு தொடர்புடையது சமுதாயச் சமயலறை (கஞ்சித்தொட்டி community kitchen) என்ற நடைமுறை.
tamhuy - டமாய் - யூதக் கலாச்சாரத்தில் பின்பற்றப்பட்டுவரும், உணவு தேவைப்படுபவர்களுக்கு உணவு வழங்கச் செயல்படும் சமுதாயச் சமயலறை நடைமுறை.

English

Hebrew term for justice, including philanthropy and service; in the Jewish tradition one of the highest forms of tzedakah is to provide poor people with the wherewithal to become productive and self-sufficient. See also kupah and tamhuy.